கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பராமரிப்பு

 

மடுகளுகளான சினை ஊசியை கொண்டு செயற்கை கருவூட்டல் வழிகாட்டுதல்கள்

  1. பசுக்கள் 18-21  நாளுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் பருவதிருக்கு  வரும் .
  2. கருவூட்டல் செய்வதற்கு முன்பும் பின்பும் பசு அமைதியான சுழலில் இருக்க வேண்டும் .
  3. செயற்கை கருவூட்டல் முறைக்கு சரியான சினை ஊசிகளை முறையான செயற்கை கருவூட்டல் பயிற்சி சி பெற்றவரை கொண்டோ , கால்நடை மருதுவர் உதவி கொண்டே செய்ய வேண்டும் .
  4. மாடுகளுக்கு சினை ஊசி போட்ட பின்பு வழக்கமாக கொடுக்கும் உலர் தீவனம் , அடர் தீவனம் கொடுக்க வேண்டும்.மாடுகள் அமைதியான முறையில் பராமரிக்கவேண்டும் .
  5. பசுவிருக்கு செயற்கை கருவூட்டல் செய்த பின்பு 10 -15  நிமிடங்கள் வரை கருவூட்டல் செய்த இடத்தில இருக்கும் நிழலில் இருத்தி கொண்டு செல்லவேண்டும் .
  6. காலையில் அல்லது இரவிலோ ,மாலையில் சின பருவ அறிகுறிகள் காணபடுகிறது என்றால் மறுநாள் செயற்கை கருவூட்டல் செய்ய வேண்டும் . இதன் காரணமாக சினைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்
  7. சினை பருவதிருக்கு வந்த மாடுகளை 12 மணிநேரதிருக்குள் கருவூட்டல் செய்து விடவேண்டியது அவசியம்
  8. செயற்கை கருவூட்டல் செய்த 85-90 நாட்களில் சினை பரிசோதனை செய்து , கருவின் நிலை பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம் .
  9. மாடுகள் கன்று ஈன்ற 65-85 நாட்களில் கவனித்து சரியான நேரத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்து விடுவது மிகம பெரும் பயனை கொடுக்கும் .