சிகப்பு அவல் உப்புமா:
தேவையானவை:
சிவப்பு அவல் – ஒரு கப், வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சிவப்பு அவலை கால் மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வேக வைத்த முளைகட்டிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு ஊற வைத்த அவல் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால், அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொள்ளலாம்).
இவ்வுணவின் பயன்கள்:
நீரிழிவு நோய்க்கு இந்த உணவு மிகவும் நல்லது…
கார்போஹைட்ரேட் கம்மியாக உள்ள உணவு..
சிகப்பு அவல் மிகவும் சத்தும், பலமும் வாய்ந்தது…