சருமத்தை இறுக்கமடையச் செய்ய ஒரு சில இயற்கை வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
* குண்டாக இருக்கிறவர்களுக்கு அதனை கரைக்க செய்யப்படும் உடற்பயிற்சியை செய்தால், டம்மி குறைவதோடு, உடல் எடையும் குறைந்து, சருமமும் தளராமல் இருக்கும். ஆனால் விரைவில் எடை குறைய வேண்டும் என்று சிலர் உடல் எடை குறைக்க சரியாக சாப்பிடாமல் இருந்து, எடையை குறைக்கின்றனர். ஆகவே அவ்வாறு எடை குறைவதால், சருமம் தளர்ந்து சுருக்கத்துடன் காணப்படுகிறது. ஆகவே உடல் எடை மற்றும் டம்மியை குறைக்க சாப்பிடாமல் இருப்பதை விட, உடற்பயிற்சியை செய்தால், நல்லது.
* தினமும் அதிகமான அளவு தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டும். இதனால் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் சருமத்தின் வெளியே ஈரப்பசையை தக்கவைக்க சருமத்திற்கு வெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை தடவ வேண்டும்.
* முக்கியமாக சருமம் அதிகம் தளர்ந்து காணப்படுவது முகம் மற்றும் கழுத்து தான். ஆகவே அங்கு ஒரு சில முகத்திற்கு ஏற்ற ஃபேஷியல்களை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ஏற்படும் சரும தளர்ச்சியை தடுக்கலாம். அதிலும் முகத்தில் சரும தளர்ச்சியை தடுக்க வாய் முழுவதும் தண்ணீரை விட்டு 1 நிமிடம் வைத்து, பின் துப்பிவிட வேண்டும். இது முகத்திற்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சி. இது போன்று முகத்திற்கு ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்தால், சருமம் நன்கு இறுக்கத்துடன் காணப்படும்.
* முகத்திற்கு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடையும். ஏனெனில் எண்ணெயில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. அதிலும் ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றால் மசாஜ் செய்தால் நல்லது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ள எண்ணெய் சருமத்திற்கு ஒரு இளமைத் தோற்றத்தைத் தருகிறது. ஆகவே இதனை வைத்து, முகத்திற்கு தினமும் மசாஜ் செய்தால் நல்லது.
* வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள பொருட்களான கேரட், பீட்ரூட் போன்ற உணவுப் பொருட்களை, சருமம் அழகாக நன்கு இறுக்கத்துடன் காணவேண்டுமென்றால், அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வைட்டமின் ஏ சத்து உடலில் இருக்கும், பழுதடைந்த செல்களை சரிசெய்யும்.
* சோயா உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் அதில் அதிகமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. புரோட்டீன் தான் தசைகள் நன்கு வலுவுடன் இருப்பதற்கு காரணம். மேலும் தசைகளின் நெகிழ்ச்சிப் பராமரிப்பில் கொலாஜென் என்னும் பொருள் தான் உள்ளது. ஆகவே அது சோயா பொருட்களான சோயா பால், சோயா பீன்ஸ் போன்றவற்றில் இருப்பதால், இவற்றை சாப்பிட வேண்டும்.
மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடலும் அழகாக பட்டுப் போன்று மென்மையுடன் காணப்படும்.