கோழிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியுமா?”

”கோழிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியுமா?” என்று கிருஷ்ணகுமார் கேட்டிருக்கிறார்.

148739_684103394997941_6130741106384966321_n

இவருக்கு பதில் சொல்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் செல்வம்.

‘‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கோழிப் பண்ணைகளில் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரித்து வருகிறார்கள். அதிலிருந்து மின்சாரம் தயாரித்து விளக்கு எரிக்கிறார்கள். மோட்டர் பம்பு செட்டை ஓட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கோழிக் கழிவுகளை பயன் படுத்தி பயோ-கேஸ் தயாரிக்கும் முறை பிரபல மாகவில்லை. மாட்டுச் சாணத்தை வைத்துத் தயாரிப்பதைக் காட்டிலும் கோழிக் கழிவிலிருந்து அதிகளவு பயோ-கேஸ் உற்பத்தி செய்யமுடியும். இதில் அதிகளவு நைட்ரஜன் சத்து இருப்பதால் அதிகமாக மீத்தேன் வாயுவை வெளியிடும். இதன்மூலம் அதிகமான சக்தியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் கோழிக்கழிவுகளிலிருந்து பயோ -கேஸ் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.” தொடர்புக்கு: அலைபேசி: 99401-78909

Thanks :Vikatan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline