சிற்பம் செதுக்கும் முறையில் தாளமானம் என்ற. அளவுமுறை மிகச் சிறப்பானதும் முக்கியமானதும் ஆகும். தாளம் என்ற. சொல் இசைக்கும். பொருந்துவதாகும். சிற்பக்கலையில் கட்டுக்கோப்பான உடலைத் தந்து அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இந்த அளவுமுறையினை பின்பற்றி வடிவமைக்கப்படும் உருவங்கள் தெய்வீகம் பெறுகிறது எனலாம்.
சிற்பத்தை வடிவமைக்க முக அளவினையே மூல அளவாக சிற்பக்கலைஞர்கள் கருதுகிறார்கள். நெற்றி முதல் மோவாய் வரையுள்ள அளவே முகஅளவாகும். இந்த அளவு கைச்சாண் நீட்டளவிற்கு ஈடென ஒரு சிலர் கருதுகிறார்கள்.
முக அளவைக்கொண்டு பெரிய உறுப்புகளின் அளவையும் சிறு உறுப்புகளின் அளவுகளையும் சிற்பக்கலைஞர்கள் கீழ்க்கண்டவாறு அளவுக்கொண்டு முறைப்படுத்தி கையாண்டனர்.
உயர அளவுகள்
கேசம் 1/4 முகம்
முகம் 1. முகம்
கழுத்து 1/4 முகம்
மார்பு 1. முகம்
நாபி 1 முகம்
குய்யம் 1 முகம்
தொடை 2 முகம்
முழங்கால் மூட்டு 1/4 முகம
கெண்டைக்கால் 2முகம்
பாதம் 1/4 முகம்
சிற்பத்தின் மொத்த உயரம் 9 முகமாகும் இது பழமையான முறையாகும்
நடைமுறையில் இருந்த இந்த அளவுமுறையை சிற்பநூல்கள் தாளம் என்ற கலைச்சொல்லைப் பயண்படுத்தி தாள அளவினால் தருகிறது.
அதாவது கேசம் 1/4 முகம் என்பதை 1/4 தாளம் என்கிறது