கொசு பிடிக்கலாம் வாங்க
நண்பரின் கொசுபிடிக்கும் பெட்டி .நிச்சயம் அவருக்கு நன்றிகள் .
ஒரு மாலை நேரத்தில் நண்பர் வீட்டில் வெளியில் இருக்கும் திறந்த வெளியில் கதைத்தோம். அப்பொழுது நேரம் மாலை ஆனா காரணத்தால் நண்பர் வாருங்க நாம் வீட்டின் உள்ளே சென்று விடுவோம் , இல்லையெனில் கொசு நம்மை தின்று விடும் என்றார்.
நானும் நண்பர்கள் அனைவரும் பேச்சை தொடர்ந்தோம். அப்பொழுது நண்பர், அடே இதை ON செய்ய மறந்து போனேன் என்று ஒன்று சிறிய குடை போன்ற ஒரு விளக்கை ( விளக்கு போலதான் ) ON செய்ய , அது நிலா நிறத்தில் ஒளிர்ந்தது.
நான் , இது என்ன இது எதற்கு எண்டேன், அவர் குரிய பதில் நிச்சயம் ஆச்சரியம் கொடுத்தது. இது ஒரு கொசு பிடிக்கும் பொறி. இதில் ஏன் தா வித ரசாயனமும், இயற்கையும் இல்லை . இது நிச்சயம் நல்ல ஒன்று என்று கூறினார் . அதனை ஆங்கிலத்தில் ” Lamps For Killing Mosquitos And Fly”
என்று கூறினார். நானும் இரண்டு வாங்கி வீட்டில் பயன் படுத்தினேன். அட நிச்சயமாய் அருமையான ஒரு விஷயம் தான் . இதில் அடிபகுதியில் எண்ணை தடவி வைப்பது நலம். இது எனது அன்பவ கண்டு பிடிப்பு.
நல்ல கொசு பொறி .பயன் அடைய வாழ்த்துக்கள் .