கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ‘சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்‘ செயல்படுகிறது.
அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை “தேசிய விருது’ கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும் சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார்கள்.
சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !
புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம்.
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.