கிழக்கிந்திய கம்பெனி – தமிழில்: எஸ்.கிருஷ்ணன்
கிழக்கிந்திய கம்பெனி தான் -இந்த உலகின் முதலில் தொடங்கப்பட்ட மிக பிரமாண்ட வரலாறு கொண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு இந்த நூல் . 1600ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் ஆரம்பித்து 1874ல் இந்த நிறுவனம் கலைக்கப்பட்டதுவரையான அனைத்து நிகழ்வுகள் விறுவிறுப்பான நடையில் மிகவும் விரிவாக முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு தொழிலுக்கான மூலதனத்தை எப்படித் திரட்டுவது, அதன் மூலம் ஏற்படும் வர்த்தக அபாயங்களை எப்படி எதிர்கொள்வது, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடமும் , நிறுவனத்திருக்கு பொருட்களை வழங்குபவர்களிடமும் எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது, உடன் இருக்கும் பங்குதாரர்களைத் திருப்தி செய்து, இருக்கும் சமூகத்தோடு சுமுக உறவை ஏற்படுத்துவது எவ்விதம் என வணிகத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான விடைகளை இந்த கிழக்கிந்திய கம்பெனியின் அசாதாரணமான வரலாற்றில் அடங்கியுள்ளன என்பது மிகவும் உண்மையாகும்.
ஆரம்பகட்ட கார்ப்பரேட் பாணி நிறுவனங்களில் ஒன்றான கிழக்கிந்திய கம்பெனி, இப்பொழுது இருப்பது போல அடுக்குமுறை நிர்வாக அமைப்பை உருவாக்கியது. இதனை ஆண்டுகாலம் ஆனாலும் உலகின் அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் இன்றும் பின்பற்றுகின்றன. இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கு அதேபோன்றோ அல்லது அதற்க்கு இணையானவற்றையே அன்று கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களும் எதிர்கொண்டனர்.
இதில் பலகேள்விகளுக்கு பதில்கள் உள்ளது.
275 ஆண்டு வாழ்க்கையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனமாக கிழக்கிந்திய கம்பெனி எப்படி மாறியது? நவீன உலகில் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக உத்வேகம் அளிக்கும் நிறுவனமாக எப்படித் திகழ்கிறது? அதிகச் செல்வத்தை உருவாக்கிய அதே சமயம் அதே அளவு சேதத்தையும் ஏன் அது விளைவித்தது? வன்முறையிலும், போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடவேண்டிய அவசியம் என்ன?
கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, வீழ்ச்சி
கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் விவரிக்கும் இந்நூல் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி இருக்கவேண்டும், இருக்கக்கூடாது இரண்டையும் கற்றுக்கொடுக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த ஒரு நிறுவனத்தின் கதை இது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தின் கதையும்கூட