வருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும்
காடுகளின் வகைகள் :
மலையகக் காடுகள்
சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் . இந்த வகை காடுகள் இருக்கும் இடம் மலைச்சரிவாகவும் அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களை உள்ளது . எடுத்துக்காட்டு – தமிழகத்தின் நீலகிரி மற்றும் ஆனைமலை இடங்கள் .
சதுப்புநிலக் காடுகள்
இந்த ஓதக்காடுகள், மாரோவ்ங்கு காடுகள் அதிக உப்பளவு நீர் கொண்ட கடலுக்கு மிகஅருகில் அல்லது ஆற்று முகத்துவார பகுதிகளில் காணப்படும்.இந்த நிலத்தில் ரைசோபோரா என்ற தாவரக்குடும்பத்தை சேர்ந்த மரங்களும், புதர்வகைகளும் காணப்படுகின்றன.பிச்சாவரம் ,கோடியக்கரையில் பல சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது .
முட்புதர் காடுகள்
இந்த முட்புதர் காடுகளில் பனை, பல வகையான முட்கள் கொண்ட கள்ளி செடிகள் ஆழமான வேருடன் காணப்படும்.இந்தவகைநிலம்பொதுவாகவயநாடுகாணப்படும்.இதில் வளரவும் அனைத்து தாவரங்களும் சதைபற்றுடன் கொண்ட இலைகளை கொண்டு இருக்கும்.
வெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள்
குட்டையான, உயரமான, மென்மையான மற்றும் கடினமான மரங்கள் காணப்படுகின்றன. சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் போன்ற மரவகைகள் காணப்படும்.இந்தவகைகாடுகள் பருவக்காற்றுக் காடுகள் என்றும் இலையுதிர் காடுகள்அழைக்கப்படுகிறது .
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
பசுமையான இலைகளை உடைய மரங்களை கொண்ட வருடம் முழுவதும் செழிப்பாகக் காணப்படுகின்றன. இந்த வகை காடுகளில் காணப்படும் மிகவும் உயர்ந்து வளரும் (50 மீட்டர் உயரம் வரை வளரும். )எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்கள் எப்பொழுதும் இலைகளை உதிர்க்காமல் எப்பொழுதும் பசுமையான இலைகளைப் பெற்று இருக்கும் . இந்த வகை காடுகள் அதிக வெப்பத்தையும் அதே நேரம் அதிக மழைப்பொழிவையும் பெறுகின்றன .வெப்பம் 25- 32 டிகிரி செல்சியசுக்கு , மழையளவு ஆண்டிற்கு 200- 250 செமீக்கு கிடைக்கிறது
உலகின் பசுமையான காடுகளைகொண்டநாடுகள்:
சுவிட்சர்லாந்து
பிரான்ஸ்
டென்மார்க்
நார்வே
பின்லாந்து
இங்கிலாந்து
ஸ்வீடன்
பெல்ஜியம்