கறவை மாடுகள் பராமரிப்பு

கறவை மாடுகள் இனவிருத்தி மற்றும் பராமரிப்பு

கறவை மாடுகள் இனவிருத்தி

முதல் முறை பருவத்திற்கு வரும் கறவை மாடுகள் சினை  பருவத்திற்கு ஒரு வருடத்தில் வந்து விடும் . சரியான முறையில் சினாய் பருவம் வருவதை கவனித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் கன்று ஈன்ற கறவை மாடுகள் 60 – 90 நாட்களுக்குள் சினை பருவத்திரு வரும் .

சினை பிடிப்பதில் ஏதுனும் கோளாறுகள் ஏற்பட்டால் இரண்டு கேரட் , 100 கிராம் ஊற வாய்த்த சுண்டல் நண்டு அரைத்து தொடர்ந்து சில நாட்கள் கொடு வந்தால் பலன் கிடைக்கும் .

அவ்வாறு கறவை மாடுகள் சினைத் தருணத்தில் இருக்கும் போது, காலையில் பருவத்துக்கு வந்தால் அன்று மாலையிலும், மாலையில் பருவத்துக்கு வந்தால் மறு நாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். இவ்வாறு கருவூட்டல் செய்யும் பொழுது கோடைகாலமா இருந்தால் மாடுகளை நிழலான இடங்களில் வைக்கவேண்டும் . அதன் காரணம்ங்க சினை பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும் .

மாடுகளுக்கு மாதம் ஒரு தடவை குடல் புழு நீக்க மருந்து தர வேண்டும். நல்ல ஆரோக்கியமான தீவனம் சரி விகிதத்தில் இருப்பது நல்லது. இதனால் மாடுகளின் கருவுறும் திறன், பாதுகாப்பாக கன்று ஈனுதலுக்கு வழி ஏற்படுத்தும்.

போதுமான பசுந்தீவனங்களை சினையாக இருக்கும்போது கொடுப்பது கறவை மாடுகளில் கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி தங்குவதை தவிர்க்க உதவும். கறவை மாடுகள் கன்று ஈன்ற 60 – 90 நாட்களுக்குள் கருவூட்டல் செய்ய வேண்டும்.

சினையாக இருக்கும் மாடுகளில் கன்று பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பால் கறவையை நிறுத்த வேண்டும். இதனால் கறவை மாடுகள் ஆரோக்கியம் கூடி கன்று ஈன்ற பின் விரைவில் சினைப்பருவ சுழற்சிக்கு வரும்.

இவ்வாறான பராமரிப்பு முறைகளினால் ஓராண்டுக்கு ஒரு கன்று தான். பால் உற்பத்தி கூடிக்கொண்டே போகும் என்பதும் உறுதி தான்.

– டாக்டர். வி.ராஜேந்திரன். முன்னாள் இணை
இயக்குனர், கால்நடைப் பராமரிப்புத்துறை
தொடர்புக்கு 73580 98090.

நன்றி – தினமலர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline