கர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்!!!

கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ அதனை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும், அவருடைய உடல் மற்றொரு உயிரை உருவாக்கி தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதை சில குறிப்பிடத்தக்க மாற்றங்களால் அறிய முடியும். இந்த அறிகுறிகள் மென்மையானதாகவும் இருக்கலாம் அல்லது மிகவும் தீவிரமானதாகவும் இருக்கலாம்.

வழக்கமாக இந்த மாற்றங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விடக்கூடியவையாக இருக்கும். இந்த ஆலோசனையானது கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காகவோ அல்லது பெண்கள் அனுபவிக்கும் வேறு ஏதாவது பிரச்னைகளான காய்ச்சல், வாந்திகளை துரத்தியடிக்கவோ, அல்லது மாதவிலக்கிற்காகவோ பெறப்படலாம். இந்த தகவல்களுடன் கர்ப்பத்திற்கு எப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

மாதவிலக்கு தவறுதல்

மாதவிலக்கு தவறுவது கர்ப்பம் தரிக்கும் போது ஏற்படும் மிகப் பொதுவான அறிகுறி ஆகும். மாதவிடாய் சுழற்சியானது ஒவ்வொரு மாதமும், பெண்களுக்கு 28 நாட்களை கொண்டதாக இருக்கும் மற்றும் இது கருப்பையிலிருந்து வெளிவரும் திரவத்துடன் முடிவடையும். பெண் கர்ப்பம் தரித்திருந்தால், இந்த செயல் நடைபெறாது. ஒவ்வொரு பெண்ணைப் பொறுத்தும், இந்த காலதாமதம் ஒரு வாரம் வரையிலும் இருக்கலாம், எனவே, மாதவிலக்கு காலதாமதமாக வந்தாலே பெண்கள் கர்ப்பமடைந்து விட்டதாக எண்ணத் தேவையில்லை. ஒரு வாரம் பொறுத்திருக்கலாம். எப்படியிருந்தாலும் மாதவிலக்கு காலதாமதமாக வருவதை உண்மையில் கர்ப்பம் தரித்துள்ளதன் அடையாளமாக கருதலாம். கர்ப்பம் தரித்துள்ளதைத் தவிர, உணவு பழக்கம், எடையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் மற்றும் பயத்தின் அளவுகளைப் பொறுத்து மாதவிலக்கு தவறலாம்.

காலை நேர சோம்பல்

இது காலை நேர சோம்பல் என்று அழைக்கப்பட்டாலும், கர்ப்பம் எந்த நேரத்திலும் சாத்தியப்படுவதை ஒவ்வாமை மற்றும் வாந்தி எடுப்பதன் மூலம் உடல் தெரிவிப்பதே ஆகும். கர்ப்பம் தரிக்க தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள்ளாக, இந்த அறிகுறிகள் தோன்ற தொடங்கும், மற்றும் இது 14 வாரங்களுக்கு தொடரும். ஒவ்வாமையின் ஒரு முக்கியமான அறிகுறியாக வாசனை உணர்வை சொல்லலாம், பல்வேறு மருத்துவர்கள் கர்ப்பமான பெண்களுக்கு அதிகப்படியான வாசனை உணர்வு உள்ளதை குறிப்பிடுகிறார்கள். இதன்படி கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சிகரெட் புகை, வாசனை திரவியங்கள் மற்றும் சமைத்த உணவு வகைகளின் வாசனைகளை எளிதில் நுகரும் தன்மை இருக்கும்.

கர்ப்பம் தரித்த பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைந்த நேரத்தில் அதிகரித்து வயிற்றையும், அதன் உட்பொருட்களையும் பாதிப்பதால் அவர்களுக்கு வாந்தி வரும். சில பெண்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளின் மீது ஒருவிதமான வெறுப்பு வரும். உதாரணமாக சிக்கன் அல்லது காபி போன்றவற்றை வெறுப்பார்கள். வேறு சிலருக்கு இதுவரை அவர்கள் சாப்பிடாத உணவு வகைகளை சாப்பிட அதீத ஆர்வமும் ஏற்படும். இந்த வித்தியாசமான உணவு முறை தேர்வுகள் மற்றும் அவற்றின் மீதான வெறுப்புணர்வுகள் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் ஏற்படும்.

மார்புகள் மென்மையாக மாறுதல்

புதிதாக கர்ப்பம் தரித்த பெண்களுடைய உடலின் ஹார்மோன் அளவுகளின் மாறுபாடுகளால், அவர்களின் மார்பகங்களுக்கு கூச்ச உணர்வு, வலி மற்றும் மென்மைத் தன்மை ஆகியவை ஏற்படும். இந்த எளிய அறிகுறியின் மூலம் ஒவ்வாமை, வாந்தி மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாறுதல்களை கர்ப்பத்துடன் தொடர்புடையதா அல்லது இல்லையா என்று உறுதிப்படுத்தலாம். குழந்தை கருவில் வளர ஆரம்பிக்கும் அதே வேளையில், மார்பகங்களும் வளர தொடங்கும். அவர்கள் தங்களுடைய மார்பகங்களை மிகவும் நிரம்பியிருப்பதாகவும், எடை கூடியதாகவும் மற்றும் மிகவும் உணர்ச்சி மிக்கதாகவும் உணருவார்கள். மார்பு காம்புகளும் மிகவும் மென்மையாகி விடுவதால், உடைகளை மாற்றும் போதோ அல்லது மார்புப் பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் பேதோ, அது பெண்களுக்கு மிகவும் சௌகரியமற்றதாக இருக்கும்.

மேற்கூறிய இந்த அறிகுறிகளை வைத்து, பெண்கள் கர்ப்பமாக உள்ளோமா, இல்லையா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். வேறு ஏதாவது அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline