கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்…
நாற்பதுகளில் இருக்கும் பெரும்பாலோனோர்க்கு சிறிய எழுத்துக்களை படிப்பதில் சிரமம் ஏற்படும். பேப்பர் படிக்க முடியாது… ஒரு விசிட்டிங் கார்டை கூட படிக்க முடியாது போகலாம். ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைமைதான் , இதிலிருந்து மீண்டுவர சில எளிய கண்பயிற்சிகள் உள்ளது. ஒரு சில நிமிடங்கள் செய்தாலே பெரிய முன்னேற்றம் கண்முன்னே தெரியும்
உடலுக்கு அசைவுகள் தேவைப்படுவதுபோல கண்களுக்கும் அசவுகளை கொடுத்து இரத்த ஓட்டத்தை கூட்டினாலே போதும் , கண்ணாடி அணிய தேவையில்லாமல் போக அதிக வாய்ப்புண்டு (இது ரீடிங் க்ளாஸ் போடுபவர்களுக்கு மட்டும் பொருந்தும்)
பயிற்சிகள் செய்வது எப்படி?!
இரண்டு கருவிழிகளையும் மூக்கு நுனியை பார்க்கும்படி பயிற்சியை துவங்கலாம், அடுத்து நெற்றி நடுவே மேல்நோக்கி பார்க்கும்படி செய்யலாம். இவை அனைத்தையும் எவ்வளவு மெதுவாக செய்ய முடியுமோ அதற்கேற்றார்போல பழகிக்கொள்ள .வேண்டும். இதில் வேகம் முக்கியமல்ல.
அதுபோலவே பக்கவாட்டில் வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என திருதிருவெனெ முழிப்பதுபோல பாவனை செய்து பயிற்சியை விரிவுபடுத்தலாம். இப்படி சில பயிற்சிகளை விளையாட்டாக செய்ததற்கே இப்போதெல்லாம் ரீடிங் க்ளாஸ் அணியாமலேயே படிக்க முடிகிறது. நீங்களும் முயற்சி செய்து பயிற்சியின் பயன்பாடுகளை பரவலாக்குங்கள். நன்றி _/\_