எடை குறைய 7 நாட்கள்!!

பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல், அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம். அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது
ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது. இதனை அமெரிக்க விவசாய துறையும், உணவு மற்றும் மருத்து நிர்வாக துறையும் பல ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரித்தன. இன்று உலகம் முழுவதும் இமந்த திட்டம் பரவி வருகிறது.

இந்த திட்டத்தின் படி ஒரு வாரத்தில் 10 முதல் 17 பவுண்ட் எடை குறையும். உற்சாகம் பொங்கி வழியும். எப்பபோது வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது. உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். பாரமில்லாத‌ உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள்.

இதை அனுபவித்தவர்கள் இந்த ஏழூ நாட்கள் உணவு திட்டத்தை கடைபிடிக்கும் போதுதினமும் 10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது பழக்கம், புகை பிடித்தல், போன்றவற்றை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை தரும்.

முதல் நாள்:
எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும்.          வாழைப்பழ‌த்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ச‌க்திகளையும் வழங்கும்.
இரண்டாம் நாள்: 
காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில் காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும் கொடுக்கும்.
மூன்றாவது நாள்: 
பழங்களையும் காய்கறி கலந்து எடுத்து கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம் கட்டாயம் கூடாது. அதே போல் உருழைக்கிழ‌ங்கும் வேண்டாம். ஏனென்றால் பழங்களில் இருந்து காபோஹைதறேட் கிடைத்து விடும். உடலின் எடை குறையத் தொடங்கும். தேவையில்லாத அதிக கொழுப்பு கரைக்கப்படும்.
நான்காம் நாள்: 
வாழைப்பழங்களையும் பாலையும் சாப்பிடலாம் இந்த நாளில் 8 வாழைப்பழங்களையும் 3 தம்ள்ர் பாலையும் அருந்த வேண்டும். ஏதாவது ஒரு சூப்பையும் அருந்தலாம். சிலரால் 8 வாழைப்பழ‌ங்களையும் சாப்பிட முடியாது . முதல் 3 நாளில் இழந்த பொட்டசியம், சோடியம் சுத்தமாக இருக்காது இந்த நாளில் தன் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சுகமான அனுபவமாக உணர‌ முடியும்
ஐந்தாம் நாள்: 
இன்றைய நாள் விருந்து நாள் இறைச்சி தக்காளியை சேர்த்து கொள்ளலாம் இறைச்சி 20 அவுன்ஸ் , 6 தக்காளிப் பழ‌ங்கள்  இறைச்சியோடு சேர்த்து சாப்பிடலாம். தன்னெரை கூடுதலாக 2 தம்ள்ர் அதாவது மொத்தமாக‌ 12 தம்ள்ர் குடிக்க வேண்டும் . இது வயிற்றில் தோன்றும். அமிலத்தை ஈடுகட்டும். இறைச்சியில் இரும்பு புரொட்டின் உள்ளன. அதிகமான தண்ணீர் குடிக்க ரத்த ஒட்டம் ஜீரண உறுப்புகள் சுத்தமாக்கப்படுகின்ற‌ன.
ஆறாம் நாள்: 
இறைச்சி, காய் கறிகளை வயிற்றின் மொத்த கொள்ளல‌வுக்கு சாப்பிடலாம். இதிலிருந்து இரும்பு , புரொட்டடீன்,வைட்டமின் நார்ச்சத்து கிடைக்கும். எடை குறையும் உடல் மாற்றத்தை உண‌ர முடியும்.
ஏழாம் நாள்: 
சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர் மட்டும் 7 நாட்களும் மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல் காற்றுப் போல் லேசாகத் தெரியும்
முயன்று பாருங்கள் ஓரே வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை உடல் குறையும்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.