இயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1

இ.எம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இயற்கை வேளாண்மைவிவசாயத்தில் பயன்படுத்தவும்  மற்றும் அறிமுகபடுத்தியவர்கள்

 

முனைவர் திரு .அ.உதயகுமார் அவர்கள் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தும் இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் . உலகில் முதலில் இந்த கலவையை கண்டுபிடித்தது ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி Dr. Teruo Higa எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த்தார் .

சமீப காலத்தில், இ.எம் ( தமிழில் திறமிகு நுண்ணுயிரி ) என்ற இரண்டு எழுத்து வார்த்தை விவசாயிகள் மத்தியில் அதிகம் பேசபடுகிறது . முதலில் செறிவூட்டப்பட்ட இ.எம் குறித்துப் பார்ப்போம். இந்த திரவத்தில் அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,அசிட்டோபேக்டர்,ட்ரைகோடர்மா,சூடோமோனாஸ்  போன்ற நுண்ணுயிகளும்,லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா,ரேசணம்,ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களுடன் 80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து இருக்கும் பழுப்பு நிறதிரவம் ஆகும் .

EM-1-Pannaiyar

 

இந்த ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் என்பது வல்லுனர்களில் கருத்து . ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவதில் நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இது பரவலாக கிடைகிறது. இதனை வெளியில் வாங்குவது எளிது.வாங்கும் கரைசலில் அனைத்து நுண்ணுயிர்களும் உறக்க நிலையில் இருக்கும். இதனை EM-1 மூலக்கரைசல் என்று அழைக்கபடுகிறது . இதனை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.

 

EM  தயாரிக்க முக்கிய குறிப்புக்கள்

ஆனால், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும். அதன் காரணமாக திரவம் தயாரிக்கும்போது சரியான அளவுள்ள கலன்களை பயன் படுத்த வேண்டும் .அப்படி தயாரித்தல் இ.எம் கரைசலின் வீரியத்தை அதிகம் பாதிப்படைய செய்யும் .

நூறு லிட்டர் இ .எம் தயாரிப்பது எப்படி ?

இ .எம்  தயாரிக்க பயன் படுத்தும் டிரம்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். டீசல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்திய டிரம்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோலச் செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்க உபயோகிக்கும் தண்ணீர், குளோரின் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படாத சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும்.இருந்தும் குளோரின் கலந்த கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலையில், அந்தத் தண்ணீரை சேகரித்து நான்கு நாள்கள் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம். சுத்தமான 100 லிட்டர் கொள்ளளவுகொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும், அதில் 94 லிட்டர் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.

 

pannaiyar-brown-sugar-organic-EM-1

இயற்கை முறையில் தயாரித்த ரசாயனம கலப்படமில்லாத ஐந்து கிலோ வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் கிடைக்காத நிலையில் அதற்கு பதிலாக 5 கிலோ மொலாசஸ்,பனங்கருப்பட்டி , கரும்புசாறு அல்லது வெல்லம் தயாரித்த கழிவுச் சர்க்கரையயையும் பயன்படுத்தலாம் . வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நலம். அப்படி இல்லாத நிலையில் வெள்ளை சர்க்கரையை பயனபடுத்தலாம் .

தொடர் கண்காணிப்புகள்

இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் நன்கு காற்று போக வண்ணம் மூடிவைக்க வேண்டும். இவ்வாறு தயாரித்த பின்பு இந்த கலனை நேரடியாக வெயில்படத இடத்தில நிழலான பகுதியில் வைக்க வேண்டும் . இதனை எந்த நேரமும் வெயில் படாத இடம் பார்த்து மாட்டுக்கொட்டகை அல்லது கொட்டகையில் நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மாலையில் ஒரு மூடியைத் திறந்து, பின்பு உடனே மூடிவிட வேண்டும். இதன் காரணமாக அதிக நுண்ணிய ஊயிர் பெருக்கம் ஏற்படும் . கலக்கத் தேவையில்லை. தொடர்ந்து ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். இந்த திரவம் எட்டாவது நாள் நமது பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை எவ்வாறு அறிவது

pannaiyar-EM1-cattlefeed

நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை எவ்வாறு அறிவது .அதற்கான சில அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம் . எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட்டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல சுகந்தமான மணம் வரும். அப்படி வந்தால் அது நமது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளது .அப்படி இல்லாமல் துர்நாற்றம் வீசினால், அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த கரைசலை நாம் அதிகபட்சம் 90 நாள்கள் வரை இருப்பு வைத்து பயன் படுத்தலாம் . .

கோழி வளர்ப்பு , கால்நடை வளர்ப்பில் பண்ணையில் பயன்படுத்தும் முறைகள்

pannaiyar-poultry-farming-EM-usage
இது கோழி வளர்ப்பு , கால்நடை வளர்ப்பில் மிக அதிகமான பயனை கொடுக்கூடிய ஒன்று .இதில் இருந்து கிடைக்கும் இரண்டாம் நிலை திரவத்தில், ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம் .கோழி குண்டு அலல்து கோழி பண்ணைகளில் ,கால்நடை வளர்க்கும் தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் மிக அதிகம் இருக்கும் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.மேலும் இது தொழுவத்தின் இருந்து வரும் துர்நாற்றத்தை குறைக்கும் திறன் கொண்டது .

 

கோழி மற்றும் கால்நடை தீவனம் பயன்பாடுகள்

pannaiyar-livestock-farming-cattle-EM-1

ஈஎம் கொண்டு கால்நடைகளுக்கு தவிடு உணவு தயாரிக்கும் பொழுது தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில்  Activated Effective Microorganisms   ( A E M ) எனும் இரண்டாம் நிலை திரவத்தை கலந்து தவிடு உதிரி இல்லாமல் இருக்கும் பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் கட்டி வைக்க வேண்டும்.

ஒருவாரம் கழித்து கட்டி வைத்து இருக்கும் அமைப்பை திறந்து பார்க்கும் போது அதன் மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூஞ்சாணம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி ஆகும் . வெள்ளை நிறம் தவிர்த்து வேறு நிறத்தில் பூஞ்சாணம் இருப்பின் அதனை பயன்படுத்த கூடாது . அது எதிர் வினைகளை கொடுக்கும் .

இவ்வாறு தயார் செய்த கலவையை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு தினசரி உணவாக கொடுக்கலாம். இது வளர்ச்சியையும் நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் .

2 Comments

  1. முதுவை உதுமான் 18/04/2019
    • Pannaiyar 18/04/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline