இயற்கை முறை மஞ்சள் சாகுபடி

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி

 

மஞ்சளில் விதை தேர்வு

நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.

மஞ்சள் விதை நேர்த்தி

மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.

அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி

(600-800 கிலோ விதை மஞ்சளுக்கு)ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) – 2 – 5 லிட்டர் (தயாரிப்புமுறை குறிக்கப்பட்டுள்ளது)சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நடவு முன் விதை நேர்த்தி:

ஆவூட்டம் – 2 லிட்டர்சூடோமோனஸ் – 1 கிலோதண்ணீர் – 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.

நிலத்தேர்வு மற்றும் நிலப்பராமரிப்பு

மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. இவ்வாறு பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாகப் பாதிக்கும். அதுபோல் நூற்புழு அதிகம் தாக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது. மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். ஆகவே மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட வேண்டும் அல்லது 2 டன் மண்புழு உரம் இட வேண்டும். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1 டிப்பர்) கடைசி உழவின்போது இடலாம்.

பலவகைப் பயிர்கள்

சமச்சீரான ஊட்டம் தரும்வகையில் பலபயிர் சாகுபடி செய்ய வேண்டும். மஞ்சள் நடவுக்கு 60 நாட்களுக்கு முன்பு பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு பலவகைப் பயிர்களை விதைக்க வேண்டும். கடைசி உழவில் விதைத்து பார் கட்டி உழ வேண்டும். இதனால் நீர் பாய்ச்ச எளிதாக இருக்கும்.

அ) தானியங்களில் ஏதாவது 4 வகை – சோளம், கேழ்வரகு, தினை, கம்பு போன்றவை

ஆ) பயிறுகளில் ஏதாவது 4 வகை – உளுந்து, தட்டை, பாசி, மொச்சை, கொண்டைக் கடலை போன்றவை

இ) எண்ணெய் வித்துகளில் ஏதாவது 4 வகை – ஆமணக்கு, எள், சூரியகாந்தி, சோயா, கடலை போன்றவை

ஈ) மணப்பயிர்களில் ஏதாவது 4 வகை – கடுகு, கொத்தமல்லி, மிளகாய், சோம்பு போன்றவை

உ) தழையுரப் பயிர்களில் ஏதாவது 4 வகை – சணப்பு, கொள்ளு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, கொழுஞ்சி

போன்றவைமேலே கூறியவற்றில் ஒவ்வொன்றிலும் 4 வகைகளையும் கலந்து மொத்தமாக 20-25 கிலோ விதைகளை ஒரே சீராக கடைசி உழவின்போது விதைக்க வேண்டும். ஒரு மாதத்தில் இவை நன்கு வளந்துவிடும்.

 

பின்னர் கீழ்க்கண்ட பயனுள்ள நுண்ணுயிர்களை தனியாகத் தயார் செய்ய வேண்டும்.டிரைகோடர்மாவிர்டி – 2 கிலோஅஸோஸ்பைரில்லம் – 2 கிலோ பாஸ்போபாக்டிரியம் – 2 கிலோ சூடாமோனஸ் – 2 கிலோ பைசிலோமைசிஸ் இவற்றை 50 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து பலவகைப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும்போது நிலத்தில் தூவிவிடவேண்டும். நுண்ணுயிர்களின் மேல் நேரடி வெயில்படக்கூடாது.பலவகைப் பயிர்கள் பயிரிட்ட இரண்டு மாதத்தில் ரோட்டோவேட்டர் கருவி மூலம் மடக்கி உழ வேண்டும். இதன்மூலம் ஏக்கருக்கு 25-35 டன் பசுந்தாழ் உரம் கிடைக்கும். எல்லாப் பயிர்களும் நிலத்தில் மக்கிவிடும்.

மண்புழு மற்றும் நுண்ணுயிர்கள் இவற்றை உட்கொண்டு நிலத்தின் தன்மையை வெகுவாக மாற்றும். பின்னர் நிலத்தை ஒன்றரை அடிப் பார்களாக அமைத்து மஞ்சள் நடவு செய்ய முனைய வேண்டும். நடவு: மே முதல் சூன் இரண்டாம் வாரத்திற்குள் மஞ்சள் நடவு செய்யலாம். நடவுக்கு முன்பு முன்னர் சொன்ன கரைசலில் விதையை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 1முதல் 1.5 அடி செடிக்குச் செடி 9 அங்குலம் இடைவெளியுடன் மஞ்சளை பாரின் ஓரததில் நடவு செய்ய வேண்டும். உடன் நீர் பாய்ச்சுவது அவசியம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மழை இருந்தால் பாசனம் தேவையில்லை.

பயிர் பராமரிப்பு

நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் கைகளை எடுத்து அகற்ற வேண்டும். களைக் கொல்லி போன்ற எந்தக் வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. 30 நாட்கள் கழித்து களை இருந்தால் மற்றொருமுறை களை அகற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் செடி, பாரின் நடுவில் வருமாறு மண் அணைக்க வேண்டும். முன்னர் கூறிய பலவகைப் பயிர்களை ஏக்கருக்கு 10-12 கிலோ வீதம் பாரின் நடுவே து£வி உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்த ஐம்பது நாட்கள் கழித்து பாரில் தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒருபார்விட்டு ஒருபாரில் பரப்பிவிட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர். பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப் படுகிறது. மண்புழுப் பெருக்கம் அதிகமாகி விரலி ஓட்டம் அதிகரிக்கும். நிலம் பொலபொலப்பாக மாறும்.நடவிற்கு 60 நாள் கழித்து தோட்டத்தில் காணப்படும் புல், பூண்டு மற்றும் சுற்றியிருக்கும் செடி,கொடிகளை சேகரித்து பலவகைப் பயிர்கள் பரப்பிய பாரில் போட வேண்டும். அதை அறுவடை வரையில் தொடர்ந்து செய்துவரலாம்.

 

பயிர்வளர்ச்சி குன்றி இருந்தால் அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் இதில் சொல்லப்பட்ட வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம்.அமுதக் கரைசல் (உடனடி வளர்ச்சி ஊக்கி)இதை நடவு செய்த 45 ஆம் நாளிலிருந்து பயன்படுத்தலாம்.

மாட்டுச் சாணம் – 1கிலா

மாட்டுச் சிறுநீர் – 1 லிட்டர்

பனைவெல்லம் – 250 கிராம்

நீர் – 10 லிட்டர்

இவற்றை நன்கு கலக்கி 24 மணி நேரம் ஊறவைத்து இதிலிருந்து 1 லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் மஞ்சள் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். நடவு செய்த 45 நாளில் 50 லிட்டர் கரைசல் போதுமானது.

ஆவூட்டம்: (ஆ – பசு, ஊட்டம் – தேவையான சத்துக்கள்)

உடனடி வளர்ச்சி ஊக்கியில் அவ்வளவு பயன் கிடைக்காவிடில் பின்வரும் ஆவூட்டம் என்ற கலவையைப் பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் – 5 கிலோமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர்(இவற்றை மண்பாளை அல்லது வாளியில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இத்துடன் தனியாக 2 லிட்டர் தயிரை 15 நாள் புளிக்கவிட வேண்டும். 16 ஆம் நாளில் மேலே கூறிய இரண்டு கரைசலையும் சேர்த்து பின்வரும் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.)* பால் – 2 லிட்டர்நெய் – 1/2 முதல் 1 லிட்டர்பனைவெல்லம் – 1 கிலோ (அல்லது நாட்டுச் சர்க்கரை)இளநீர் – 3-4 எண்ணம்இவற்றை எல்லாம் நன்கு கலந்து 1 வாரம் மண்பாணையில் ஊற வைக்க வேண்டும். தினமும் மாலை 3 நிமிடங்கள் வரை கலக்கிவிட்டு வர வேண்டும். இதுவே ஆவூட்டக் கரைசல் இதை ஆறு மாதம்வரைப் பயன்படுத்தலாம்.

மஞ்சள் பயிருக்கு 1 லிட்டருடன் 10 லிட்டர் நீர் சேர்த்து இலைகளில் நன்கு படும்படியாக தெளிப்பான் மூலம் அடிக்க வேண்டும்.மஞ்சளில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் முதிர்ந்த இலைகளின் ஓரம் கருகத் தொடங்கி இருக்கும். விரலி ஓட்டத்திற்கும் நல்ல திரட்சியான மஞ்சளுக்கும் சாம்பல் சத்து மிக அவசியம். இதைச் சரிசெய்ய தோட்டத்தின் வெளியில் உள்ள களைகளைச் சேகரித்து வந்து உலர வைத்து தனியான இடத்தில் தீயிட்டுச் சாம்பல் செய்ய வேண்டும். இந்தச் சாம்பலை ஏக்கருக்கு 50-100 கிலா என்ற கணக்கில் மண் அணைக்கும்போது போட வேண்டும். அல்லது உமி சாம்பல் 500 கிலோ பயன்படுத்தலாம் வேர்மூலம் பரவும் நோய்களான கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தவும் வேரைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும் கீழ்க்கண்ட கரைசலைப் பயன்படத்தலாம்.

 

சாணஎரிவாயுக் கிடங்கில் இருந்து கிடைத்த சாணக்கழிவு – 50 லிட்டர்ஆவூட்டம் – 5-10 லிட்டர் சூடோமோனஸ் புளோரசன்ஸ்டிவிரிடி 500 கிராம் ர்பைசிலோமைசிஸ்நீர் – 100-200 லிட்ட

இவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். மு

தல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த

மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.இவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களு’குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்போன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சி விரட்டி

பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது, அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரினங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.

பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும்.

ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.

ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.

கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.

உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.

கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – வேப்பங்கொட்டை, எட்டிக் கொட்டை

இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன. இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள், பூச்சிகள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன.

இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.

மாதிரி அளவு:

1) சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ

2) 1. சீதா இலை- 3-5 கிலோ, 2. காகிதப்பூ இலை-3-5 கிலோ,

3) உண்ணிச் செடியிலை- 3-5 கிலோ,

4) பப்பாளி இலை 3-5 கிலோ

 

மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். அதாவது 4 வகைத் தழைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ கணக்கில் 8 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவேண்டு. இவற்றுடன் மேலே சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை 100-500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை பூச்சிவிரட்டி

இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முத 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். வடிகட்டி கரைசலில் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊறல் போடவும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

வேகல் முறை பூச்சிவிரட்டி

இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 15 லிட்டர் நீரை ஊற்றி 2 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை வடித்து ஆறிய பின்னர் ஒரு படி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் மொத்த வடிகரைசலுடன் 100 லிட்டர் நீர் சேர்க்கலாம். கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.இலைப்புள்ளி நோய் பாதித்த இலைகளின் மேற்புறம் நீண்ட கண்வடிவ புள்ளிகள் தென்படும். பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகிவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழை 3 கிலோ, உண்ணிச் செடி இலைகள் அல்லது சீதாப்பழ இலை அல்லது பப்பாளி இலை 3 கிலோ எடுத்து இவ்விரண்டு இலைகளையும் 15 லிட்டர் நீரில் வேகவிட வேண்டும். 10 விட்டர் அளவிற்கு சுண்டிய பிறகு 1 கிலோ மஞ்சள் தூள் கலந்து ஒருநாள் ஊறவிட வேண்டும். ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் கலந்து இலைப்புள்ளி தென்படும் இலைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

அறுவடை

7 முதல் 9 மாதம் கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும். அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண்வெட்டி கொண்டு கிழங்கு மற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline