ஆஸ்துமா டயட்

ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுகுழாய் சுருங்குகிறது. காற்று தடைப்படுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும்.

ஆஸ்துமா இருப்பவர்கள் விதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவேண்டும். நட்ஸ் வகைகள் விதைகள் தான் எனினும் துவக்கத்தில் நட்ஸில் உள்ள மக்னிசியம், பி6 வைட்டமின்கள் துவக்கநிலை டயட்டில் நட்ஸ் சேர்க்கலாம். கீழ்காணும் டயட்டும் உணவுகளும் ஆஸ்துமாவுக்கு நிவாரணம் அளிக்கும்.

வைட்டமின் சி: வைட்டமின் சி உள்காயத்தை குணமாக்கும் சக்தி வாய்ந்தது. எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்கனி முதலானவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வரவேண்டும். வைட்டமின் சி ஆஸ்துமா அட்டாக்கின் அறிகுறிகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது

பி6 வைட்டமின்: பிஸ்தா பருப்பு, கீரை முதலானவற்றில் அதிகம் காணபடும் வைட்டமின் இது. இது ஹிஸ்டாமைன் உற்பத்தியை மட்டுப்படுத்தி ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும்

மக்னிசியம்: பாதாம், கீரையில் காணப்படும் மக்னிசியம் நம் தசைகளை ரிலாக்ஸ் செய்யும். நுரையீரல் தசைகளையும் இது ரிலாக்ஸ் செய்வதால் மூச்சுகுழாய் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்

மீன்: ஒமேகா 3 நிரம்பிய மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் உள்காயம் குணமடையும். மூச்சுகுழாய் காயங்கள் குணமடையும்

இதுபோக உள்காயத்தை குணமாக்கும் சக்தி வாய்ந்த பச்சை பூண்டு (2 துண்டு), மஞ்சள், துளசி இலை போன்றவற்றையும் உணவில் சேர்க்கவேண்டும்

ஆஸ்துமா டயட்:

காலை: 100 வறுத்த பாதாம் அல்லது 100 கிராம் பிஸ்தா

மதியம்: 200 கிராம் கீரை, 4 முட்டை

டின்னர்: கோழி இறைச்சி, மீன்..எலும்புகளை கடித்து முடிந்தவரை உண்ணவும். பால் சற்று அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. கோழி எலும்பு, மீன் எலும்பில் உள்ள கால்ஷியம் பதிலுக்கு கால்ஷியத்தை அளிக்கும். ஆட்டுக்கால் சூப், கோழி சூப் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை ஈரல் உண்ணவேண்டும்.

வாரம் இரு முறையாவது மீன் உண்ணவும். உண்ணகூடிய எலும்புக்ளை மட்டுமே உண்ணவும். முள் சிக்கிகொள்ளா வண்ணம் எச்சரிக்கையாக இருக்கவும்

உணவுடன் 2 துண்டு பச்சைபூண்டு, துளசி இலை, மஞ்சள் கிழங்கு (பெப்பெருடன்) ஆகியவற்றை சேர்க்கவும்.

ஒரு நாளுக்கு 2- 3 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உப்புடன் அல்லது உப்பின்றி பருகவும்

1 ஆப்பிள், 1 பச்சை வாழை ஆகியவற்றை டயட்டில் சேர்க்கலாம். வெஜிட்டபிள் சாலட் சேர்க்கலாம்.

வைட்டமின் டி ஆஸ்துமாவுக்கு மிக முக்கியம் என்பதால் மதிய வெயிலில் அரைமணிநேரம் (12 முதல் 12:30 வரை) கால் அல்லது கையை நேரடி சூரிய வெயிலில் காட்டவும்

உள்காயத்தை ஏற்படுத்தும் குப்பை உணவுகள், தானியம் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆஸ்துமாவுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எடையை இறக்குவதும் பலனளிக்கும். மேலே சொன்ன டயட் எடையையும் இறக்கவல்லது.

இதனால் முழுநிவாரனம் கிடைக்குமா என்பது நோயின் தீவிரம், எத்தனை நாட்களாக உள்ளது போன்ற காரணிகளை பொறுத்தே உள்ளது. ஆனால் இதனால் ஆஸ்துமா அட்டாக்கின் தீவிரதன்மை குறையும்.

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline