அரப்பு மரம் இயற்பெயர் ஊஞ்சல் மரம்

அரப்பு மரம் இயற்பெயர் ஊஞ்சல் மரம்-இவைகளை நாற்றிலிருந்து வளர்ப்பது கடினம். ஊஞ்சல் காய் விதைகளை நேரடியாக ஊன்றி வளர்க்க வேண்டும்.இது ஒரு நீண்ட கால த் தரிசு நில மரம். மெதுவாகத்தான் வளரும். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலூக்கா ஊதியூர் மலையைச் சுற்றி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் (தாராபுரம் முதல் காங்கேயம் வரை) உள்ள வெங்கைக்கல் தரிசு நிலங்களில் அதிகமாக இவை உள்ளன. நீர்ப் பாசனம் இல்லாத மரங்களில் இருந்துதான் மிக மென்மையானதும் நன்கு நுரைக்கக் கூடியதுமான அரப்புத் தூள் கிடைக்கும். முற்றிய இலைகளை விடுத்து நல்ல கொழுந்துகளைச் கேகரித்துக் காய வைக்க வேண்டும். இத் தூளுடன் கொஞ்சம் சிகைக் காய்த் தூளும் பன்றிக் கோரைத் தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தேய்த்துத் தலைக்குக் குளித்துப் பாருங்கள்; தலை முடி அப்படியே பஞ்சு போல் மிதக்கும்! உங்களைச் சுற்றி ஒரு தெய்வீக மணம் கமழும்! இதைத் தலைக்குத் தேய்த்துக் கொண்டு மதியம் குளியலிற்குப் பின் சிறுதானியச் சோறும் காங்கேயம் மாட்டுப் பால் தயிரும் கொண்ட மதிய உணவை ஒரு பிடி பிடித்து விட்டு அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள்! இரவு பத்து மணி வரை ஒரு துளி கூடச் சோம்பல் தெரியாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.