அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி மருத்துவ மூலிகை

 

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

 

அம்மான்_பச்சரிசி_Euphorbia_hirta

 

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.
இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil – Amman Pacharisi

English – Snake weed

Sanskrit – Dugdhika

Telugu – Reddine narolu

Malayalam – Nela paalai

Botanical name – Euphorbia hirta

 

ammanpacharisi

 

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.
காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்

ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே

கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

– அகத்தியர் குணபாடம்

 

அம்மான் பச்சரிசி பயன்கள்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படுமழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும் போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்..சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும் ,அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை. பயன்தரும்.

அம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண் , மலச்சிக்கல் , நமச்சல் , பரு ,மறு நீகள் ஆகிய குணம் உண்டு  இதன் பாலை நக சுற்றிக்குதடவ குணமாகும்.

The plant flowers and fruits all year long.
There are the following phytochemicals in asthma weed: sterols, alkaloids, tannins, glycosides, triterpenoids, alkenes, phenolic acids, choline, shikimic acid.
Asthma weed has antiviral and – bacterial properties.

It is used against asthma, bronchitis, worm infestation, conjunctivitis and dysentery. The latex of the plant is used for warts and cuts. It also has lactogenic properties.
சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.  இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும்  பின் அனைவரும் அது வெறும்  காகிதம்  தான்  எனக்  கூறியதும்  அதைத்  தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்.. இவ்வாறு  வித்தைக் காட்ட  இன்னும்  பல  மூலிகைகள்  இருக்கிறது  .

One Response

  1. M SULOCHANA 09/07/2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline