அது முடியாத காரியம்!!!

Huge_Door

 

ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க.
ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.
இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்க முடியல ! நம்மால எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.
இதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! .
ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார் .


கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது எனும் தயங்கினர் !
ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!
பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!
என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியை வழங்கினார்
“அது முடியாத காரியம்” என எப்போது உன் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ
அப்போதே புரிந்து கொள் நீ சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய் என்று !!!!!!!

பாலாஜி புதுகை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline