கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம்
அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள்
அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர் பலருக்கு முதுகுப் பகுதியில் அக்கி எனப்படும் கண்ணுக்குத்தெரியாத வேர்க்குரு போன்ற நீர் வடியும் சிறு சிறு கொப்புளங்கள் அதிகப் படியான வெயிலின் தாக்குதலால் ஏற்பட்டு அரிப்பு எரிச்சல் நீர் வடிதல் போன்ற துன்பங்களைத் தரும் இதை எளிதாகப் போக்க மிகச் சிறந்த எளிய அனுபவ நிரூபணமான வீட்டு மருந்து இருக்கிறது மருந்து போட்ட ஓரிரு நாட்களிலேயே குணமடைவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்
மருந்து
பசலைக் கீரை இலைகளை அரைத்துப் பிழிந்து எடுத்த சாறு
நாட்டுப் பசு வெண்ணெய்
ஆகிய இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பசை போல செய்து
அக்கிப் புண்கள் மீது இரவில் பூசி
காலையில் மிதமான வெந்நீரில் குளித்து வர
மூன்று நாட்களில் அக்கி பரிபூரணமாகக் குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் :- திரு.பொன்.தங்கராஜ்