இட்டேரி கிராமத்து கீதங்கள்

கிராமத்து மக்களுக்கு இந்த இட்டேரி மாற்றங்கள் இப்போது யோசித்தால் புரியும் முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது எங்கள் கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது “ஒரு தனி உலகம்.” இதை “Itteri eco-system”…

Continue reading →

திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல…

Continue reading →

இதற்கு தான் படித்திருக்க வேண்டும்

ஒரு வங்கி கொள்ளையின் போது ….. கொள்ளையர்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினர் . “”இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது”” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் …. . மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . “. This is called “Mind Changing Concept” Changing the conventional way of thinking.” . அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது…

Continue reading →

படித்தவன், படிக்காதவன்

மாருதி நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது. காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம் என்றார் மேலாளர். வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம் என்றார்…

Continue reading →

கணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா

பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த கணித, வானியல் அறிஞர் ஆரியபட்டா. பூமியின் விட்டத்தை 99.8 சதவீதம் துல்லியமாகக் கணக்கிட்டவர். பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு கணித மதிப்புகளை இவர் பயன்படுத்தியுள்ளார். பை-க்கு (π) இன்று சொல்லப்படும் மதிப்புக்கு நெருக்கமான மதிப்பை அந்தக் காலத்திலேயே சொன்னவர். சூரிய கிரகணம், சந்திர கிரகணம், தன் சுற்றுப்பாதையில் பூமி சுற்றுதல், ஒளியை நிலவு பிரதிபலிக்கும் தன்மை உள்ளிட்டவை பற்றி விளக்கி எழுதியுள்ளார். 23 வயதிலேயே ‘ஆரியபட்டியா’ என்ற நூலையும், பின்னர் ‘ஆரியச் சித்தாந்தா’…

Continue reading →

கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர்

ராஜஸ்தானில் உள்ள பின்மால் பகுதியைச் சேர்ந்த கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர். கணித வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றிவரும் பூஜ்ஜியத்தை உலகுக்கு அளித்தது இந்தியா. அதை பூஜ்ஜியத்தைக் கணக்கிடுவதற்கான கணிதச் சூத்திரங்களை முதன்முதலில் வகுத்தவர் பிரம்மகுப்தர். கணிதம், வானியலில் இரண்டு முதன்மை நூல்களான ‘பிரம்மாஸ்புதசித்தாந்தா’, ‘கண்டகாத்யகா’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.

Continue reading →

கணிதவியலாளர் -ராகமிஹிரர்

  மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர் வராகமிஹிரர். ‘பிரஹத் சம்ஹிதை’ என்ற கலைக்களஞ்சியம் போன்ற விரிவான நூலை எழுதியதற்காகப் புகழ்பெற்றவர். சம இரவு-பகல் நாளில் இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி 50.32 விநாடிகள் என்பதை முதலில் கணித்துக் கூறியவர். மால்வா பகுதியின் மன்னர் யசோதர்மனின் அமைச்சரவை நவரத்தினங்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் வராகமிஹிரர். இவருடைய தந்தை ஆதித்யதாசரும் ஒரு வானியலாளரே.

Continue reading →

உலகில் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்.

  உலகில் முதன்முதலில் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சுஸ்ருதர். கண்புரை நீக்க அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை உட்படப் பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி அவர் விவரித்த ‘சுஸ்ருத சம்ஹிதை’ நூலின் மூல வடிவம் தற்போது கிடைக்கவில்லை. இந்த நூல் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் இந்த நூல் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue reading →

ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை – சரகர்

ஆயுர்வேத மருத்துவத்தின் இரண்டு அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சரஹ சம்ஹிதை’யை எழுதியவர் சரகர். 2000-க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகளைக் கொண்டது இந்நூல். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் இவர், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். சரகர் என்ற பெயருக்கு நாடோடி அறிஞர், நாடோடி மருத்துவர் என்று அர்த்தம். வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களுக்குச் சிகிச்சை அளித்து உடல்நலனைப் பாதுகாக்கலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயல்பட்டவர். அத்துடன் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதைவிட, முன்கூட்டியே தடுப்பதுதான் சிறந்தது என்பதையும்…

Continue reading →

எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்

  சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை…

Continue reading →