Category Archives: சேராதவை

தொழில் மரியாதையும் சுய மரியாதையும்.

13423743_1147768305243900_7551861793016466244_n
செருப்புக் கடைக்கு ஒரு கஸ்டமர் சென்றார். கடையில் உள்ள பணியாளர் அவரை வரவேற்று அழைத்து, அவருக்கு செருப்பை எடுத்துக்காட்டினார்.. கஸ்டமரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.

இது செருப்பு வாங்க வந்த கஸ்டமருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார் கஸ்டமர்….. ஆனாலும், பணியாளர் விடவில்லை…

பணியாளர் தொடர்ந்து அவருக்கு உதவினார். கஸ்டமர் பெருந்தன்மையாக சொன்னார் “அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது”

பணியாளர் சிரித்தபடி சொன்னார்.

“இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், நீங்கள் நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என்னுடைய சுய மரியாதை!

கடைக்குள் நீங்கள் நூறு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நான் நிறுத்த மாட்டேன். இது என்னுடைய தொழில் மரியாதை.

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!

நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!

இவ்வுலகில் உள்ள எல்லா விலங்குகளுமே தங்களுக்கென்று சில தகவல் தொடர்புக்கான திறமைகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் நம் வீட்டுச் செல்லப் பிராணிகளும் நம்மிடம் தாவிக் குழைந்து ஏதோ சொல்லத் துடிப்பதைக் கவனித்துள்ளீர்களா?

ஒரு நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு குழைவதும், ஒரு பூனை தன் முன்னங்காலைக் கொண்டு அழகாக ஹேண்ட் ஷேக் செய்வதும்… இப்படி நம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு மொழி தான்! ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

அப்படி என்ன தான் நம்மிடம் அவை பேச விரும்புகின்றன? அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?

கம்பிகளைக் கடிக்கும் வெள்ளெலி :

ஒரு சிறு கூண்டுக்குள்ளே அடைபட்டிருக்கும் வெள்ளெலி, தனக்கு போரடித்தாலோ தன்னை யாரும் கவனிக்காமல் இருந்தாலோ அந்தக் கூண்டிலுள்ள கம்பிகளைப் பிராண்டித் தின்னுமாம். இதைத் தவிர்க்க, வேறு ஒரு கூண்டை அதற்கு ஏற்பாடு செய்து, அது விளையாடுவதற்கு சில பொம்மைகளையோ சிறிய டப்பாக்களையோ அதற்குள் போட்டு வைக்க வேண்டும். முடிந்தால், அடிக்கடி அதை கூண்டுக்கு வெளியே கொண்டு சென்று விளையாட வைக்க வேண்டும்.

கால்களில் தஞ்சம் புகும் நாய் :

தீபாவளி அல்லது புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கும் போது, நம் வீட்டு நாய் அரண்டு போய் மிரட்சியுடன் நம் கால்களுக்கிடையில் தஞ்சம் புகுந்து கொள்ளுமே! எதற்காக? ஒரு அன்பு கலந்த பாதுகாப்பைத் தேடித் தான்! அதேபோல், நாம் வெளியில் போய்விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பும் போது, ஒருவிதமான சத்தத்துடன் நம் மேல் பாய்ந்து வந்து விழும் நம் செல்ல நாய். இச்செய்கை, ‘இவ்ளோ நேரம் ஏன் என்னைத் தனியா விட்டுட்டு போனீங்க?’ன்னு அது நம்மிடம் கேட்பது போலிருக்கும்.

ருசி தேடும் நாய் :

பிஸ்கட், பன் போட்டால் அவற்றை சாதாரணமாக சாப்பிடும் நம் வீட்டுச் செல்ல நாய், ‘அவ்ளோ தானா, வாய்க்கு ருசியா சிக்கன் மட்டன் எதுவும் கிடையாதா?’ன்னு கேட்கிற மாதிரி ஒரு லுக்கு விடும் பாருங்க. நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அது எதிர்பார்க்கிற மாதிரி நாமும் சிக்கனோ மட்டனோ சாப்பிட வைத்தால், அது நம்மிடம் காட்டும் அன்பே தனிதான்!

மூக்கால் கொஞ்சும் முயல் :

முயல்கள், தாம் மிகவும் சந்தோஷமாக இருப்பதைத் தங்கள் மூக்கினால் நம்மை முணுமுணுவென்று உரசுமாம். அதேபோல், நல்ல மனநிலை இருக்கும் போது, வாயில் எதுவுமே இல்லாதபோதும் எதையோ மெல்லுவது போல் நடிக்குமாம் இந்த முயல்கள்!

சத்தம் தரும் பூனை :

நாய்களுக்கு அடுத்தபடியான ஒரு வளர்ப்புப் பிராணி பூனை என்று சொல்லலாம். அதன் ‘மியாவ்’ சத்தத்தை மிமிக்ரி செய்யாதவர்களே இருக்க முடியாது. ஆனால், அந்த ‘மியாவ்’ சத்தத்திற்குள்ளும் பல மொழிகள் உண்டு. பசியால் பால் தேடும் போதும், இரை தேடும் போதும், ஒவ்வொரு விதமான ஒலியை பூனைகள் எழுப்புகின்றன.

கண்களை மெதுவாக இமைக்கும் பூனை :

சில நேரம், நாம் ஒரு பூனையை சற்றே நெருங்கி உற்றுப் பார்க்கும் போது, அது ஸ்லோ மோஷனில் தன் கண்களை இமைப்பது தெரியும். அப்பூனை நம்மை முழுவதுமாக நம்புகிறது என்று இதற்கு அர்த்தமாம்.

தரையில் புரளும் குதிரை :

தாங்கள் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருப்பதை உணரும் குதிரைகள், அதே இடத்தில் மண்ணில் உருண்டு புரளுமாம். தன் தோலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், அவை இவ்வாறு மண்ணில் புரளுவதுண்டு. ஆகவே அதை உடனடியாகக் கவனித்து நாம் சரிசெய்ய வேண்டும். நம் வளர்ப்புப் பிராணிகளின் மொழிகள் சில சமயங்களில் நமக்குப் புரியாவிட்டாலும், அவை தம் அன்பையும், நட்பையும், விசுவாசத்தையும் நம்மிடம் பரிமாறிக் கொள்ளத் தான் இப்படிச் செய்கின்றன என்பதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

pannaiyar_jackfruit_india_tamilnadu

அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.

உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்.

மா :

பல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.
மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.

கொய்யா :

களர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.

சப்போட்டா :

இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.

எலுமிச்சை :

மண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.
வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

மாதுளை :

களர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.
ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்

பப்பாளி :

வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும்.

சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்;களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.

சீத்தா :

மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.

பலா :

ஆழமான வண்டல் நிங்;கள் ஏற்றவை.
காற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.
வழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல

சீமை இலந்தை :

ஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும்.
வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.

நெல்லி :

குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,
கார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.

தென்னை :

ஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?

 

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்
யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்
என்பதை எவருமே மறுக்க முடியாது.
உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70%
யூதர்களின் கைவசமே உள்ளது.

அழகு சாதனங்கள், நாகரிக உடைகள்,
உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத்
துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று
பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள்
சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக
கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி
சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது
பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த
திறமையைக் கொடுத்தார்? இந்த திறன்
தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு
தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய
வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே,
அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால்
சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக்
கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது
1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப
வர இருந்தபோது என் மனதில் தோன்றிக்
கொண்டே இருந்தன.

எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும்
உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார்
செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும்
ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள்
பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன்
ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு
மேதாவியாக இருக்க வேண்டும் என்பதற்காக
ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார்
செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்
கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும்
இருப்பாள்.

கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித
வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள்.
தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை
எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு
கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது
அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?”
என்று கேட்பேன்.

“ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி
கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக
ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும்
வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக்
கொண்டே இருப்பாள். கர்ப்பிணியின் உணவும்
விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான
கொட்டை வகைகளையும், பேரீச்சையையும்
கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை
துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும்,
மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக்
காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை
உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது
என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை
மூளைக்கு நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண்
மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின்
வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத
பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்;
இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன்
இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம்
உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது
என்று நம்புகிறார்கள்..

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள்
சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம்
போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்;
அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள்
சரிவர புரியாது என்கிறார்கள்.

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது
மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து,
மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்;
இதன் காரணமாக அடுத்த தலைமுறை
அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி
குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும்.
இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட்
புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?
உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்
……. . யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு
விடுகிறேன்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும்
உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.
பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே
குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன்
எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள்
உணவு உட்கொள்ளுகிரார்கள். என் மதிப்பீட்டின் படி
ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் – ஹீப்ரூ,
அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக
இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து
பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள்
இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது
ஒரு கட்டாயம் இசைக்கருவி வாசிக்கும் பழக்கம்
குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து,
அவர்களை மேதைகள் ஆக்கும்.

இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன்
திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே
மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள்
வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப்
பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா
குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு
பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின்
தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல்
ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில்
ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்
மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான
முடிவு எடுக்க உதவுகின்றன. உயர் நிலைப் பள்ளியில்
மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம்
ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக
பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு
முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்
படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி
நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும்
அறிமுகப்படுத்தப் படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள்
கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடை
முறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள் அடங்கிய
அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில்
10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான்
அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில்
பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப்
புகழ்பெற்ற லெவிஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல்
பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை
வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும் போது கவனித்து
இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து
அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச்
செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு
அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.

இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட
மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு
இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல்
என்று சொல்லலாமா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக
நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது.
யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால்
வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம்
தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே
ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY,
ஆரக்கிள், லெவிஸ், டன்கின் டோனட், ஹாலிவுட்
படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள்
இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.

யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில்
அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின்
வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர்
தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா
நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம்
என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட்
பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்
களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப்
போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம்
என்று கருதப்படுகிறது.

ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்!
அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவே
தான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே
இருந்த போதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள்
இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட்
சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான்.
எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு
இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை
இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்
பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய
தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே
இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர
வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக்
கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம்
சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில்
நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை
உருவாக்க முடியுமா?

இயற்கை முறையில் வாழை விவசாயம்

வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி சாதனை!!!
கரூர் அருகே குளித்தலையில் வாழையில் இயற்கை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து புதிய வேளாண் தொழில் நுட்பம் கொண்டு விவசாயி ஒருவர் சாதனை செய்துள்ளார்.

11058795_448762605275007_9019700097718822295_n 10985213_448762575275010_2200483220731890142_n

கரூர் மாவட்டம், குளித்தலையில் இயற்கை வேளாண்மைக்கு முன் உதாரணமாக கே.வி.செந்தில் குமார், என்பவர் இயற்கை முறையில் வாழை விவசாயம் செய்ததோடு, அடர்நடவு முறையில் விவசாயம் செய்து சாதனை புரிந்துள்ளார். இவர் தனது வாழைத்தோட்டத்தில் வாழைக்கன்றுகளை, சாதாரண நடவில் 9 அடிக்கு ஒரு கன்று என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 800 கன்றுகளே நட முடியும். ஆனால் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 1250 கன்றுகள் நடலாம் என நட்டு சாதனை புரிந்துள்ளார். இவரிடம் இந்த விவசாயத்தை பற்றி கேட்ட போது, “கரூர் அறிவியல் வேளாண்மை மையத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் தனசேகர் இந்த அடர்நடவு முறையை பற்றி எனக்கு சொன்னார். அடர் நடவு முறையில் 2 கன்றுகளுக்கு இடையே 2 அடி இடைவெளியில் கன்றுக்கு முன் பகுதியில் 7 அடியும், பின் பகுதியில் 7 அடியும், இடது பக்கம், வலது பக்கத்தில் 9 அடி இடைவெளியும் இருக்கும் படி நடவு செய்வது தான் அடர்நடவு முறை, இந்த முறையில் அனைத்து வாழை ரகங்களையும் நட முடியும், ஆனால் ஒவ்வொரு ரகத்திற்கும் அளவு மாறுபடும். இங்கு சொன்ன அளவு கற்பூர வள்ளி ரகத்திற்கு மட்டும் பொருந்தும். அது போல எழரிசி என்ற வாழை ரகத்திற்கு முன் பின் 6 க்கு 6 அடி, இடது வலது 8 க்கு 8 அடி இருக்க வேண்டும். கன்றுகளுக்கு இடையே 2 அடி இருந்தால் போதும். இதே அளவில் பூவம் வாழையும் நடலாம். ஒரு ஏக்கருக்கு 1500 கன்றுகளை நடலாம். ரோப்பாஸ்ட்ரா ஜி 9 போன்ற உயரம் குறைந்த வாழை ரகங்களையும் ஜிக் ஜாக் முறை படி கன்றுகளுக்கு இடையே 1.5 அடி இடைவெளியும், முன் பின் மற்றும் இடது வலது 6 அடி இடைவெளியும் விட்டு நடலாம். இந்த வாழை ரகங்களை ஒரு ஏக்கருக்கு 1600 லிருந்து 1750 வரை நடலாம்.

அடர்நடவில் பயன்கள் ஏராளம், இதன் மூலம் நிழல் பாங்கான அமைப்பு, இயற்கையிலே உருவாகிறது. நிழல் உருவாவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. நிழல் பாங்கான சூழ்நிலை எப்போதுமே நிலவுவதால் நுண்ணுயிர்கள் வளர்ச்சி நிலையாக இருக்கிறது.. நுண்ணுயிர்கள் நிறைந்து இருப்பதால் உரப்பயன் பாடு தேவையில்லாத நிலை உருவாகிறது. வாழையில் இருந்து உதிரும் காய்ந்த இலைகள், மட்டைகள் மூடாக்குப் போடப்படுவதாலும், நுண்ணுயிர்களுக்கு அது உணவாக்கப்படுகிறது. மேலும் மண்ணின் பெளதீகத் தன்மை அதிகரித்து அங்ககப் பொருட்கள் அதிகமாகிறது. களைகள் வளர்வதில்லை. அரியதாக வளரும் களைகளும் சூரிய ஒளி கிடைக்காததால் பிழைத்திருக்க முடியாமல் மடிகிறது. மடிந்த களைகள் மண்ணுக்கு உரமாகிறது. மேலும் இம்முறை பின்படுத்தப்படுபதினால் நிலத்தினுடைய கார, அமிலத்தன்மை சமநிலை படுத்தப்படுகிறது.” என்று கூறிய கே.வி.செந்தில்குமார் அவர் அதன் தொழில் நுட்பத்தையும் விளக்கினார்.

விதையே விளைச்சலுக்கு மூலாதாரம், அதனால் வாழையை பொறுத்த வரை கன்று தேர்வே மிக முக்கியமானதாகிறது. வாழையில் நோய்த் தாக்குதல் ஏற்படுவதே கன்றுகளை சரியானதாக தேர்ந்தெடுக்காததால் உண்டாவது தான். வாழைக்கன்றுகளை, தொடர்ச்சியாக வாழையே பயிரிடும் இடத்தில் இருந்து தேர்வு செய்யக்கூடாது. மேலும் தொடர்ச்சியாக வாழை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து கன்றுகள் வாங்கக் கூடாது. ஏனென்றால் நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு இருக்கு. மேலும் நோய் தாக்குதல் உள்ள இடங்களில் இருந்தும், கன்றுகளை எடுக்கக்கூடாது. நடவு செய்யும் இடமும் தொடர்ந்து வாழை சாகுபடி செய்யும் இடமாகவும் இருக்க கூடாது. வாழை கன்றுகளை பயிர் சுழற்சி உள்ள நிலத்தில் தான் நட வேண்டும். கன்றுகளை நட்டபின் தேவைப் பட்டால் நடப்பட்ட 3, 5, 7 மாதங்களில் பொட்டாஷியம் பயன்படுத்தலாம். வாழையில் இருந்து ஒரு அடி தள்ளி பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குழிகளை எடுத்து ஒன்றில் பொட்டாஷியமும், மற்றொன்றில் ஊட்டமேற்றிய தொழு உரத்தையும் வைக்கலாம். இது போக இலைவழியாக தெளிக்கும் பயிர் ஊக்கியாக பஞ்சகாவியம், பழக்கரைசல் பயன் படுத்தலாம் இவற்றால் பயிர் செழித்து வளரும். அடர்நடவு முறையில் காற்றின் மூலம் சேதம் ஏற்படுத்துவது தடுக்கப்படுகிறது. நெருக்கம் அதிகமாக இருப்பதாலும் காற்று உள்ளே நுழைய முடியாத அளவில் இருப்பதாலும், வாழைக்காய்கள் மிக நன்றாக பெரிதாக வளர்கிறது. நட்ட நாளில் இருந்து 10 வது மாதத்தில் வாழை ஈனத் தொடங்கும். 12 வது மாதத்தில் இருந்து ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். சாதாரண நடவில் ஒரு தாரில் 200 காய்கள் இருக்கும். எடை 30 முதல் 31 கிலோ வரை இருக்கும். அதே வாழை அடர் நடவு முறையில் பயிரிட்டு இருப்பதால் 250 காய்களும், 38 கிலோ எடை இருக்கும். நிழல் பாங்கான சூழல் நிகழ்வதால் காயின் தன்மை மிக நன்றாக இருக்கிறது. மேலும் வாழைத்தார்கள் நிழல் பாங்கான சூழ் நிலையில் இருப்பதால் அதன் குவாலிட்டி கலர் நன்றாக இருக்கும். சாதாரண நடவை விட, அடர் நடவு முறையில் அறுவடை காலம், ஒரு மாதம் கூடுகிறது. காய், மற்றும் இழைகளில் பச்சையம் வியக்கும் வண்ணம் கவர்ச்சியாக இருக்கிறது. அடர் நடவின் மூலம் ஏக்கருக்கு ரூ 2 லட்சம் வரை லாபமாக பெறுவதோடு நிலத்தின் வளமும் கூடுகிறது. உரச்செலவு, பூச்சிக்கொல்லி செலவு இல்லாமல் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் அடர்நடவு முறையில் வாழையை பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம் என்கிறார்.

நாசமாக்கிய நாகரீகம் !!!!!!

 

BpD72mXCUAEv9KD

 

மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை
உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை
குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை

கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை
கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை

விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை
குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை

வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை
நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை

தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை
நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை

நல்லதையும் கெட்டதையும் கட்டிகாத்த வேட்டிகளும் சேலைகளும் இல்லை
ஆறுதலான அன்பை பகிர்ந்துகொள்ள ஆத்தாவும் ஐயாவும் இல்லை

பிள்ளைகளை இடுப்பில் சுமந்த அம்மாக்களும் இல்லை
தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் இல்லை

வெள்ளை எடுத்த உவர் மண்ணும் இல்லை
மங்கலங்கள் தந்த மஞ்சள் பையும் இல்லை

நெஞ்சம் குளிர பசியாற்றிய கஞ்சி கலையங்களும் இல்லை
மாராப்பு சேலை அணிந்த பாட்டிமார்களும் இல்லை

இனம் மதம் தாண்டி மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிய உறவுகளும் இல்லை
ஒரு உப்பு சவுக்கார கட்டியை ஊரே தேய்த்து குளித்த ஊர்களும் இல்லை

தாவணிகள் தந்த தாரகைகளும் இல்லை

முக மஞ்சள் பூசிய மணி மகுடங்களும் இல்லை

மல்லிகைமணம் சுமந்த கூந்தல்களும் இல்லை
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பண பைகளும் இல்லை

மாட புறாக்களும் இல்லை
குயில் பாடிய கானங்களும் இல்லை

ஏறி குளங்களில் மிதக்கும் எருமை மாடுகளும் இல்லை
புனை அடித்த யானைகளும் செக்கிழுத்த காளைகளும் இல்லை

கைகளை துண்டால் மறைத்து பேசிய சந்தை வியாபாரமும் இல்லை
தொலைபேசியின் நூறு அழைப்புகளில் நிறைவுபெறாத நெஞ்சம்

ஒரே கடிதாசியில் உள்ளம் குளிர்ந்த கடிதங்களும் இல்லை
திலகம் இட்ட நெற்றிகளும் இல்லை

தேகம் வளர்த்த ராகி திணை கம்புகளும் இல்லை
கோபுரங்கள் காட்டிய கோடி புண்ணியங்களும் இல்லை

கன்னகியாகிய பெண் சாபங்களும் இல்லை
முல்லைக்கு தேர் கொடுத்த அரசனும் இல்லை

நாலு ஊரு தாண்டி அதிகாலை ஒலிக்கும் வாங்கு சப்தமும் இல்லை
முந்தானை முடிச்சுகளும் இல்லை……

நமக்குள் முன்னேற்றம் என்ற பெயரில்

நம்மை நாசமாக்கிய நமது நாகரீகம் ….

Source: Facebook

‎பணம்‬

என்னிடம் இருந்த ‪ ‎பணம்‬   ‪நண்பர்கள்‬ பலரை  ‪துரோகிகள்‬ ஆக்கியது.
என்னிடம் இல்லாத பணம் ‪உறவுகளை‬ எல்லாம் என்னிடம் இருந்து பிரித்து மகனை உட்பட  ‪அனாதை‬ ஆக்கியது.
பணம் மீண்டும் கை சேர்கிறது… இப்ப நான் என்ன செய்ய
‪தள்ளிப்‬ பேகவா
‪தவிர்த்து‬ விடவா
‪தவிக்க‬ வைக்கவா
‪தகர்த்து‬ பார்காகவா

 

பிச்சை :நிறைய யோசிக்க வைத்தது.

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.

அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, “குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது”- என்றார்… ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்…

Saimiri_sciureus-1_Luc_Viatour

“சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன…

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன…

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன…

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது”- என்று பதில் சொன்னார்…

நிறைய யோசிக்க வைத்தது.

Four Acres and Independence – A Self-Sufficient Farmstead

நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு சுதந்திரமான வாழ்கை .

நிலபரப்பு அதிகம் உள்ளது , நிச்சயமான வாழ்க்கை . பணம் என்பதை தாண்டி ஒரு நிம்மதியான வாழ்க்கை. சந்தித்த தடங்கல்களை எப்படி சரி செய்தற் என்பதை பற்றி பகிர்வு .

பணம் என்பது மட்டுமே தேவை என்று இல்லாமல் இருக்கும் இடைத்தை வைத்து வாழ்கை வள முடியும். அதற்கான முயற்சிகள் பற்றிய கனவுடன் பேசும் ஒரு வெள்ளைகாரன் வார்த்தை களை கேளுங்கள் . வெள்ளைக்காரன் பணக்காரன் என்று என்ன உள்ளவர்கள் பலர் .

மரியாதைக்குரிய பிரிட்டிஷ் பொறியாளன் – ஜான் பென்னிகுயிக்.

யார் இந்த ஜான் பென்னிகுயிக்…..?

இது 118 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை…

தமிழகத்தின் நெல்லைமாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறு அது(முல்லைப் பெரியாறு). குமுளி வழியாக கேரளாவுக்குள் பயணம் செய்து அரபிக்கடலில் கலந்து கொண்டிருந்தது. குமுளி மலைக்குக் கிழக்கே தமிழகத்தில் தேனிமாவட்டம் தொடங்கி அதைச்சுற்றியிருந்த சுமார் இரண்டரை லட்சம் ஏக்கருக்கும் அதிகமான (அரிசி தரும்) நெல் விளையும் பூமி தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. தலைக்கு மேலே கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் அதுவும் தமிழகத்தில் உற்பத்தியாகிற தண்ணீர் ஒரு சொட்டுக்கூட தங்களுக்குக் கிடைக்காமல் அரபிக்கடலில் எந்த மனிதர்க்குப் பலனின்றி கலந்து உப்பாகிக்கொண்டிருந்தது.

தேனிமாவட்டப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் உணவுக்கு கிழங்குகளைப் பறித்து தின்றுகொண்டும், வழிப்பறி, கொள்ளை அடித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேறு வழி இல்லை…உணவுக்கு என்னவேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது.

பிரிட்டிஷ் பொறியாளராக இந்தப்பகுதிக்கு வந்திருந்த ஜான் பென்னிக்குயிக்….இந்த மக்களின் நிலையைப்பார்த்துப் பரிதாப்படுகிறார், பதறுகிறார். கண்ணுக்குத் தெரியும் மலையின்மீது ஆறு ஓடுகிறது…அது கீழேவந்தால் இந்தப்பகுதி வளம் பெறும்.

220px-John_Pennycuick

அந்தத்தண்ணீரை அப்படியே கீழே கொண்டுவருதற்கு வழி இல்லை. அதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். அப்படியானால் குமுளி (கேரளப்பகுதி) ஆற்றுக்குக்கு குறுக்கே அணை ஒன்று கட்டவேண்டும். அந்த அணை அரபிக்கடலில் ஓடிக்கலக்கும் தண்ணீரைத் தடுத்து தேக்கி வைக்கும். அதாவது மேற்கு நோக்கி ஓடும் ஆற்றை அணை கொண்டு தடுத்து (தேவையான அளவு தேக்கிக்) கிழக்கு நோக்கித் திருப்பவேண்டும். மீதமுள்ள தண்ணீர் அரபிக்கடலுக்கே செல்லலாம். (இந்தவகையில் அத்தகைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் அணை இது)

கிழங்கையே மூன்று வேளை உணவாக உண்டு வாழும் மக்கள் வாழ்க்கை முறை மாறும் என்று எண்ணுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு பட்ஜெட் தருகிறார். அரசும் அரைமனதோடு முதல்கட்டமாக சிறு தொகை ஒன்றைத் தருகிறது. சுண்ணாம்பு, சுட்ட செங்கல் ஜல்லி, சர்க்கரை, கால்சியம் ஆக்சைடு, முட்டை என கலவைகள் உருவாக்கப்பட்டு கட்டப்படவேண்டும்.

அணை கட்டுவதற்குத் தொடங்கியபோது காட்டுக்குள் விலங்குகள் தொல்லை, யானைகள் தொல்லை என பலவித இயற்கை செயற்கை தொல்லைகளைச் சந்திக்கிறது கட்டுமானக்குழு. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பலவித பாதிப்புகளையும் தாண்டி அணைக்கட்டுமானம் நடக்கிறது.

ஒரு இரவு தொடங்கிய மழை..தொடர்ந்து பெய்ய கட்டப்பட்ட கட்டுமானம் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறது. பென்னிக்குயிக்கின் கனவும் அந்த மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. கூலிக்காக இல்லாமல் தங்கள் சந்தததிகளின் வாழ்வாதாரத்திற்காக கல்லும், மண்ணும் சுமந்து குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் ஒட்டிய வயிறோடு பாடுபட்ட அத்தனை ஊழியர்களின் கனவுகளும் மழைவெள்ளத்தில் அடித்துசெல்லப்படுகிறது. அடர்ந்த வனாந்திரத்தில் ரத்தம் சிந்திக்கட்டிய அணை காட்டாற்று வெள்ளத்தோடு கலந்து கண்முன்னே பறிபோகிறது.

பிரிட்டிஷ் அரசின் உயர் அதிகாரிகளை அணுகுகிறார் பென்னிக்குயிக். மூன்று ஆண்டுகள் கட்டிய நிலையில் அணைக்கட்டுமானம் உடைந்துபோன நிலையில் அவரை மேலும்கீழும் ஏளமானகப்பார்த்த அவர்கள் இனிமேல் சல்லிக்காசுகூடக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்து விடுகின்றனர். தளரவில்லை பென்னிக்குயிக். தனது நாட்டுக்குச் செல்கிறார். தனக்கும் தன் மனைவிக்குச் சொந்தமான அத்தனை சொத்துக்களையும் விற்றுக்காசாக்குகிறார். மீண்டும் தேனிமாவட்டத்திற்கு வருகிறார்.

இந்தமுறை பென்னிக்குயிக்கின் சொந்தக்காசில் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது முல்லைப்பெரியாறு அணை. இந்த முறை இயற்கையும் அவருக்கு ஒத்துழைத்தது. முல்லைப்பெரியாறு அணை கட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை தேனி மாவட்ட நிலப்பரப்புக்குகொண்டு வர ராட்சத குழாய்களைப் பதித்து தண்ணீரை தரைக்குக் கொண்டுவருகிறார் பென்னிகுயிக். அஸ்திவாரத்தில் இருந்து 176 அடி உயர அணை அது. அதன் அப்போதைய மதிப்பு 1.04 கோடி ரூபாய் (!).

காய்ந்து வறண்டுபோய் வானம் பார்த்துக்கிடந்த 3 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு தண்ணீர்கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் மூன்று வேளை நல்லுணவு உண்ணுகின்றனர். எவரையும் துன்புறுத்தாத நாகரிக வாழ்வியலுக்கு மாறுகின்றனர் லட்சக்கணக்கானோர். கோடிக்கணக்கான மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது.

தேனிமாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்றியபின் அப்படியே கிழக்கு நோக்கி ஓடும் இந்த தண்ணீர், மதுரையைக் கடந்து அங்கும் தாகம் தீர்த்துவிட்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும் தாகம் தீர்த்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தையும் ஈரப்படுத்திவிட்டு வங்காளவிரிகுடாவில் இறுதியில் கலக்கிறது. மேற்கே அரபிக்கடலில் கலந்த தண்ணீரை வங்காள விரிகுடாவிற்குத் திருப்பிவிட்ட பென்னிகுயிக் எத்தனை சந்ததிகளுக்கு எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறிப்போனார் ? அதுவும் தன் சொந்தக்காசில்…?!

இந்த அணை 50 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்றே அவரைக் கேலி செய்தனர் அன்றைய பிரிட்டிஷ் சக பொறியாளர்கள். ஆனால் 119 ஆண்டுகளையும் தாண்டி இன்னமும் பல 100 ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும் தரத்தில் உள்ளது முல்லைப்பெரியாறு அணை. 119 ஆண்டுகளுக்கு முன்னரே 1 கோடியே 40 லட்சம் ரூபாய் என்றால் இன்று இந்த அணையின் மதிப்பு எத்தனை கோடிகள்….???? !!!

இத்தகைய மாபெரும் புரட்சியின் நாயகன்தான் ஜான் பென்னிக்குயிக்..!

– விஷ்வா