பனையில் 34 வகை உள்ளது

பனையில் 34 வகை உள்ளது அவை 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை 15.இளம்பனை 16.கூறைப்பனை 17.இடுக்குப்பனை 18.தாதம்பனை 19.காந்தம்பனை 20.பாக்குப்பனை 21.ஈரம்பனை 22.சீனப்பனை 23.குண்டுப்பனை 24.அலாம்பனை 25.கொண்டைப்பனை 26.ஏரிலைப்பனை 27.ஏசறுப்பனை 28.காட்டுப்பனை 29.கதலிப்பனை 30.வலியப்பனை 31.வாதப்பனை 32.அலகுப்பனை 33.நிலப்பனை 34.சனம்பனை

Continue reading →

புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி 

உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு கொடுப்பதால், சத்துக்கள் கிடைப்பதோடு, தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம் என, கால்நடைத்துறை பரிந்துரைத்துள்ளது. கால்நடைகள், உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில், குறைந்த புரதச்சத்துகள் இருப்பதோடு, எளிதில் செரிப்பதால், பால் உற்பத்தி குறைவதோடு, உடல் வளர்ச்சி தாமதப்படும். இதற்காக, அதிக விலை கொடுத்து, அடர் தீவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். பாலின் விலை அதிகமாவதற்கு, தீவனச் செலவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில்,…

Continue reading →

தீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள்

கால்நடை வளர்ப்பு வேளாண்மையுடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் பசுக்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பசுந்தீவனத்துக்கு அதிக அளவில் விவசாயிகள் செலவிடும் நிலையில், தீவனச் செலவுகளை பல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், தீவனச் செலவு பெருமளவு குறையும். கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக்கு பல வகைகளில் உதவியும் புரிகிறது. விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின்…

Continue reading →

உயிராற்றல் வேளாண்மை- தர்ப்பை ஜலம்

இதில் பராசர முனிவர் கூறியுள்ள அளவுகள் அரைக் கட்டைவிரல் அளவு Š கோமயம், ஒரு பலம் கோமூத்திரம், ஏப்பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஓரு பலம் தர்ப்பைஜலம் என்ற அளவுகளில் சேர்க்கப்பட வேண்டும்.  மேற்கூறிய பொருட்களை எந்த மாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும் என்றும் தயாரிக்கும் போது கூறப்பட வேண்டிய மந்திரங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த நாளில் உபயோகித்தால் பலன்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது மந்திரங்கள் கற்றுக்கொள்ளத்…

Continue reading →

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது. இளநீர் சேதம் தென்னை மரங்களில் உள்ள இளநீரை மட்டுமே மரநாய்கள் குடிக்கின்றன. தென்னங்குலைகளில் இளநீரில் வழுக்கை உருவாகும் 7-வது…

Continue reading →

புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

அடுக்குமுறை சாகுபடியில் மது ராமகிருஷ்ணன் பின்பற்றும் வழிமுறைகளைப் பார்த்தோம். அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் மீதான ஆர்வத்தில் முற்றிலும் முந்திரிக்காடாக இருந்த இடத்தை மாற்றி, இன்றைக்குப் பல அடுக்குச் சாகுபடிக்கு மாற்றியுள்ளார். முதலில் பாம்ரோசா என்ற மணக்கும் எண்ணெயைச் சாகுபடி செய்து, அதை எண்ணெயாகக் காய்ச்சி வடிக்கும் ஆலை முதலியவற்றை வைத்து மிக நுட்பமாகச்…

Continue reading →

வாரம் ஒரு மரம் – சந்தனம்

வாரம் ஒரு மரம் – சந்தனம் தனம் தரும் சந்தன மரங்கள் ஒரு ஏக்கரில் இருந்து ஒரு கோடி ருபாய் வருமானம் பார்க்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். அதற்காக அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சந்தன மரங்களை நடவு செய்தாலே போதும்! மரங்களில் முதன்மையானதும், அதிக வருமானம் தருவதுமாக இருப்பது சந்தன மரம்தான். என்றாலும், மூன்றாண்டுகளில் சவுக்கு, ஐந்தாண்டுகளில் தைல மரம், பத்தாண்டுகளில் கருவேல மரத்தை அறுவடை செய்யலாம் என்று சொல்வது போல, சந்தனத்தை இத்தனை ஆண்டுகளில்…

Continue reading →

நெல் காய்க்குமா?…காய்க்கும்.

  12 அடிக்கும் மேலாக வளர்ந்த நெல்: புத்தளத்தில் அதிசயம்… சாதாரணமாக நெற் பயிர் ஒன்று சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்ந்துள்ளதையே நாம் இது வரைக் கண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பயிர் ஒரு மரமாக அதுவும் 12 அடிக்கும் மேல் வளர்ந்த ஒரு மரமாகக் காணக் கிடைப்பது ஆச்சரியமான விடயம்தானே? அந்த நெல் மரத்தைக் காணும் வரை அதனை நம்பவில்லைதான். ஆனால் அந்த நெல் மரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனோம். இந்த…

Continue reading →

ஆர்கானிக் சான்று

ஆர்கானிக் சான்று   இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல்,…

Continue reading →

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் பிச்சை.பேரையூர் சின்னபூலாம்பட்டியில் ௩௦ ஏக்கரில் ததும்பி வழியும் கிணற்று தண்ணீரில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை பயிர்களை பயிரிட்டு அசத்துகிறார். ‘விவசாயத்தில் ஜெயிக்கும் ௭௧ வயது இளைஞன் நான்’ என்று பேச ஆரம்பித்தார்.பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த…

Continue reading →