600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

1379615_10200570470656581_647124037_n

தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்

திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.

இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.

மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.

திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்

பெயர்கள்: சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்

திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்: ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்,

நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை ஆராய்சி மையம், 79,காமராசர் சாலை, கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – 614 624 9629601855

 

10 Comments

 1. ஐயா, எங்களுக்கு அவிரி விதை பொடி தேவை. என்னுடைய மின்னஞ்சலுக்கு கிடைக்கும் இடத்தை தெரிவிக்கவும்

  நன்றி
  ரம்யா

  1. வணக்கம் ,

   தாங்கள் முகபுதகத்தில் தொடர்பு கொள்ளுங்கள் .உதவி கிடைக்கலாம் .. நானும் தேடுகிறேன் கிடைத்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

   https://www.facebook.com/pages/reStore/131968447779
   https://www.facebook.com/pages/Organic-Pasumaiyakam/169219013153203
   https://www.facebook.com/sanjivni.organic
   நன்றி
   பண்ணையார்

 2. ஐயா.வணக்கம் .

  எனக்கு சிரியாநங்கை, சிருகுரிஞ்சான் தேவை.

  கொடுத்து உதவுங்கள்.

  9442426142

  1. வணக்கம் , தங்கள் இதில் உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளுங்கள் . உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் .நீங்கள் நேரில் சென்று பெற்று கொள்ளுங்கள்
   நன்றி

 3. அய்யா வணக்கம். சிருகுரிஞான் செடி இலை (சர்க்கரை நோய்க்கொல்லி ) என்னிடம் உள்ளது (வெள்ளாட்டு பாலில் சர்க்கரை நோய்க்கு மருத்துவம் வழங்கபடுகிறது தேவை படுபவர் தொடர்பு கொள்ளுங்கள்
  9043459416

 4. வணக்கம.என் மகனுக்கு மாதத்தில் ஒரீரு நாட்களில் காய்ச்சல் சளி இருமல் வருகிறது .தயவுசெய்து வழி கூறுங்கள்.

 5. ஐயா எனக்கு திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்

  பெயர்கள்: சிறியநங்கை,நாகமல்லி, நத்தைசூரி, உத்திராட்சம் தூதுவளை, நாயுருவி, பிரண்டை, முடக்கறுத்தான், குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஊமத்தை, யானைகுண்டுமணி, விழுதி மற்றும் பல மூலிகைகள் தேவைப்படுகிறது
  தாங்கள் கொடுத்து உதவ முடியுமா
  எனக்கு பதில் அளியுங்கள்

 6. அய்யா எனக்கு கடுக்காய் மரத்தின் இலைகள் தேவை தயவு செய்து கிடைக்கும் இடத்தை தெரியபடுத்தவும்

  1. sudhagar
   yelagiri Hills
   8870677600
   கடுக்காய் மரத்தின் இலைகள் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *