பெண்கள் வயதாவதை தடுத்து இளமையாக்கும் சஞ்சீவினி

 

10996173_441697119328001_3616938743094316403_n

பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முக அழகும், உடல் அழகும் ஒப்பனைகள் மூலம் பெற்றுவிட முடியாது. அதற்க்கு நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மூலமே அடையலாம். சில பெண்களை கண்கூடாக பார்த்து 10,15 வயது இளைமயாக எவ்வாறு தோன்றுகிறார்கள் என்று அதிசயப்பட்டிருக்கலாம். இந்த அற்புத நிவாரணியை வழங்கிய பெண்மணி சொல்கிறார் அவருடைய பார்வை -3ல் இருந்து -1ஆக குறைந்து, சருமம் மிருதுவாகவும், உடல் கட்டாகவும், தன்னுடைய முடி அடர்த்தியாக விட்டதாகவும், முடி உதிர்தல் முற்றிலும் நின்று விட்டதாக சொல்கிறார்.

அந்த அதிசய, அற்புத மருந்து செய்ய என்ன தேவை என்று பார்ப்போம்:

100 மில்லி பிளாக்ஸ்சீட் எண்ணை (Flax Seed Oul)
2 நடுத்தர எலுமிச்சை பழம்
1 பெரிய பூண்டு
0.5 கிலோ தேன்

சுத்தம் செய்த பூண்டு, 1 எலுமிச்சை தோலுடன் முழுதாகவும், ஒரு எலுமிச்சை பழத்தின் ஜூஸும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் சேர்த்து கலக்கி, மேலாக பிளாக்ஸ் சீட் எண்ணையை ஊற்றி நன்றாக கிளறவும். ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு கெட்டியாக மூடி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டேபிள்ஸபூன் சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவும்.

இந்த மருந்து எவ்வாறு உடலை இளமையாக்குகின்றது ?

பிளாக்ஸ்சீட் எண்ணை இயற்கையான தாவர ஹார்மோன்களை கொண்டது. இதில் லினொலிக் (ஒமேகா 3), ஓலிக் ஆசிட் (ஒமேகா 9), பால்மிட்டிக் கொழுப்பு எண்ணை ஆகியவற்றைக் கொண்டது. இதில் பாதிக்கும் மேலாக அடங்கியுள்ள கொழுப்பு ஆல்பாலினொலிக் ஆசிட்டை (ஒமேகா 3) கொண்டது. இது மீனில் காணப்படும் ஒமேகா 3யைவிட இரண்டுமடங்கு கூடுதலாகாகவும், தாவரவகைகளில் ஒமேகா அதிகமாகவும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதும் இந்த பிளாக்ஸ்சீட் எண்ணை. இவை எலுமிச்சையுடன் சேரும்பொழுது ஈரலையும், பித்தநாளங்களையும் சுத்தமாக்குகின்றது. நம்முடைய ஈரல் இளமையை காக்க முக்கிய பங்காற்றுகின்றது.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு அற்புத ஆன்ட்ஆக்ஸிடன்ட்டாக செயலாற்றுகின்றது. அத்துடன் பூண்டுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தநாளங்களை சுத்தமாக்குகின்றது. தேன் உடலுக்கு ஊட்டமளித்து, உடலின் உறுப்புகளை சுத்தமாக்கி இளமையாக்குகின்றது.

2 Comments

  1. ஸ்ரீநிவாசன் 24/03/2015
    • Pannaiyar 25/03/2015

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline