ஒரு மனிதரின் வாழ்க்கை பதினெட்டு காண்டங்கள்

ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கல் பதினெட்டு பகுதிகளைக் கொண்ட பதினெட்டு காண்டங்களைக் கொண்டதாகும். அது மட்டுமல்லாமல் சிறப்புக் காண்டமாக பிரசன்ன காண்டமும் உண்டு.
நாம் இப்பொழுது காண்ட விவரங்களைக் காண்போம்.

1. பொதுக் காண்டம்
ஒரு மனிதனின் பெருவிரல் ரேகையைக் கொண்டு அல்லது பிறப்பு விவரங்களைக் கொண்டு கீர்த்தி, புகழ், கௌரவம், வசதிகள் பல்வேறு விதமான யோகங்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய பொதுப் பலன்களை சுருக்கமாகஸ் சொல்லும் குருநூல் பொதுக் காண்டமாகும். பிற காண்ட பலன்களை அறிந்து கொள்ள இந்த காண்டத்தை கட்டாயம் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.

2. கல்வி மற்றும் குடும்ப காண்டம்
கல்வி நிலை, குடும்பநிலை, வருமான வாய்ப்புகள், வாக்கு, செல்வம், தானம், கண், பல் மற்றும் ஆபரணச்சேர்க்கை முதலிய அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

3. சகோதர காண்டம்
வெற்றிகள், அக்கம்பக்கத்தவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகள் அவர்களால் சாதகர் அடையும் நன்மை தீமைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

4. தாய்வழி சுகக்காண்டம்
தாயார், மனை, நிலம், சொத்து, சுகம். வாகனயோகம், எந்திர யோகம், புதையல், மகிழ்ச்சி, ஆபரண சேர்க்கை மற்றும் தெய்வீக சுகங்கள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

5. புத்திர காண்டம்.
குழந்தைகள், பூர்வ புண்ணியம், ராஜயோகம், தாய் மாமன் மற்ரும் தர்மகர்ம சிந்தனைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

6. சத்துரு காண்டம்
விரோதி, வியாதி, கடன், வழக்கு, பிரச்சினைகள், மனக்கலக்கம், சிறைதண்டனை, களவு, குற்றம், பொறாமை மற்றும் விபத்து போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

7. திருமண காண்டம்
திருமணவாழ்வு, எதிர்கால வாழ்க்கைத் துணைவரின் வரலாறு, வாழ்க்கைக் துணைவரின் பலன்கள் மற்றும் நட்பு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

8. ஆயுள் காண்டம்.
ஆயுள் காலம், கண்டம், விபத்து, மற்றும் மரணத்தின் தன்மைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

9. பிதாபாக்கியம் காண்டம்
தந்தை, செல்வம், பணச்சேர்க்கை, பரிசு, தெய்வ தரிசனம், ஆலயம் கட்டுதல், குரு உபதேசம், முக்தி மார்க்கம், தெய்வீக மந்திரம், தெய்வீகப் பொருள், தர்மம், அறப்பணி, யாகம், ஓமம், தந்தைவழி மூதாதையர் சொத்துக்கள் மற்றும் திடீர் பொருள் வரவு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

10. தொழிற்காண்டம்.
தொழில், தொழில் வாய்ப்பு, வியாபாரம், தொழிலுயர்வு, நீண்ட பொருள் வரவு, கர்மம், சமூக சேவைகள் மற்றும் பொது வாழ்வு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

11. லாப காண்டம்
லாபம், இளைய களத்திரம் (இரண்டாம் திருமணம்), தகாத உடலுறவு இன்பங்கள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

12. விரைய காண்டம்.
விரையம், அடுத்த பிறவி, மோட்சம், வெளிநாட்டு பிரயாணம், படுக்கை சுகம், ஆண்மைக்குறைவு மற்றும் உடலுறவு இன்பம் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

13. சாந்தி காண்டம்.
முற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கல் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

14. தீட்சை காண்டம்
தெய்வீக ஆற்றலைப் பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள் (ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

15. ஔடதக் காண்டம்.
நோய்கள், நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள் மற்றும் சித்த மருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களை சொல்லும் குருநூல்.

16. திசாபுக்தி காண்டம்.
நவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் ஏற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களை சொல்லும் குருநூல்.

17. பொதுவாழ்வு (அரசியல்) காண்டம்.
சமூக சேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

18. ஞானகாண்டம்.
யோக ஞான மார்கங்கள், முக்தி மார்கங்கள், தெய்வீக உபதேசங்கள், தெய்வீக தரிசங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

சிறப்புக் காண்டம்
19. பிரசன்ன பிரச்சனை காண்டம்
இக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline