ஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம்
ஏலக்காய் சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.
மேலும் சிலர் அந்த ஏலக்காய் ( ஏலக்காய் in english Elettaria_cardamomum ) பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில் மசாலா பொருளான ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் என்ன பயன் என்பது அவர்களுக்கு தெரியவில்வை மற்றும் பலருக்கும் தெரியாது. ஆகவே அதன் உண்மையான மருத்துவ குணம் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
* ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.
* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.