ஸ்டாடின் மருந்துகளால் இதய இரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்க முடியுமா?

 

மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படையான கடிதம்

#1:Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore. ஸ்டாடின்கள் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இந்த வெளிப்படையான கடிதத்தை எழுதுகிறேன். ஸ்டாடின்கள் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் நாம் நியாசின் மற்றும் கொழுப்பு அமிலம் உள்ள ஒமேகா 3 மருந்துகளை இரத்தத்தில் அதிகக் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குப் (hypercholesterolemia) பரிந்துரைத்து வருகிறோம். ஆனால் உணவு மற்றும் மருந்து குழு (Food and Drug Association – FDA) சர்க்கரை நோயாளிகளும், இதய நோய் உள்ளவர்களும் ஸ்டாடின் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறது. அதாவது மருத்துவர்கள் அதனால் நோயாளிகளுக்கு விளையும் நன்மை தீமைகளை மனதில் கொண்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்கிறது.

சரி. இதய தமனிகளில் ஏற்பட்ட அடைப்பை (Coronary atheroma) தவிர்க்க ஒன்று அல்லது மூன்று இரத்த நாளங்களில் நோய் இருக்கும் ஒருவருக்கு, அல்லது மாரடைப்பு வந்த நோயாளி ஒருவருக்கு Atorvastatin 40mg கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதன் விளைவாக நாம் எதிர்பார்க்கும் நன்மை :ஸ்டாட்டின் கொழுப்பைக் குறைக்கும் என்பதுதான். ஆனால் இரத்த நாளங்களில் மெழுகு போன்ற பொருள் (இரத்தக்குழாய் அடைப்பு) படிவதைத் தடுக்குமா?

இல்லை! ஸ்டாடின்கள் இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கும்!!!

அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி இதழில் வந்த ஒரு ஆய்வறிக்கையை (American college of cadiology 2015:65:1273-82) உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஸ்டாட்டின்களுக்கு இரத்த நாளங்களில் கறை ஏற்படுத்தும் தன்மை உண்டு என்று படித்திருக்கிறோம். இந்தக் கறைகள் நிரந்தரமாக இருக்கும்.

உங்கள் எல்லோருக்கும் தமனியில் ஏற்படும் கால்சியம் அளவைக் கண்டறிதல் (Coronary artery calcium scoring) பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். கொழுப்பு படிந்துள்ள இதய நாளங்களில் எவ்வளவு கால்சியம் படிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனை இது. கால்சியத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். கறை படிதலை நிரந்தரம் ஆக்கும் ஸ்டாட்டின்கள் இந்த கால்சியம் அளவைக் கூட்டும். அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு ஸ்டாட்டின்கள் கறையின் அளவை அதிகப்படுத்துகிறது. ஸ்டாட்டின்கள் கொடுக்கப்படாத அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த கால்சியம் எண்ணிக்கை அதிகமாவதில்லை.

முடிவாக ஸ்டாட்டின்கள் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு இதய நாள இரத்தக் குழாய்களில் அடைப்பை 99 சதவிகிதம் அதிகரிக்கிறது. எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் ஸ்டாட்டின்கள் கொடுப்பதால் நோயாளிகள் வாழுகாலம் குறையும்.

ஸ்டாட்டின்களை இன்றே நிறுத்துங்கள். உங்களை தெய்வமாக நினைக்கும், நமக்கு வாழ்வு கொடுக்கும் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் மகத்தான பணியை மட்டுமே டாக்டர்களாகிய நாம் செய்வோம்.

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline