லுகொ டெர்மா அல்லது விடில்கோ

10613036_887479267976959_8485888678800981910_n

சிலருக்கு தோலில் வெள்ளையாக திட்டுக்கள் மாதிரி பரவும். உடலெங்கும் பரவி ஆண்டுக்கணக்கில் குணமாகாமல் அவதிபடுபவர்கள் உண்டு. இது வெறும் தோல்நிறமாற்றமே, தொட்டால் பரவும் வியாதி அல்ல என்றாலும் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் அவர்களை தள்ளி வைத்து மேலும் வேதனைபடுத்துவார்கள்.

விடில்கோ ஏன் வருகிறது என்பதுக்கு நவீன மருத்துவத்திடம் பெரிய அளவில் விளக்கங்கள் இல்லை. ஜெனடிக்கலாக வருகிறது என ஒரு தியரி உண்டு. ஆனால் இது தவறு. விடில்கோ வந்தவர்களின் குழந்தைகளுக்கு இது வரும், அவர்கள் பெற்றோருக்கு இருந்திருக்கும் என சொல்லமுடியாது. ஆக ஜெனடிக்ஸ் தியரி தவறானது விடில்கோ வர இன்னொரு காரணமாக கூறபடுவது இது ஒரு ஆட்டோஇம்யூன் வியாதி என்பது. ஆட்டோஇம்யூன் வியாதிகளை பற்றி முன்பே படித்துள்ளோம்.

ஆனால் தற்போது வரும் ஆய்வுகள் விடில்கோ வர காரணம் ஊட்டசத்து குறைவே என கண்டறிந்துள்ளன. குறிப்பாக பி12 வைட்டமின், போலிக் அமிலம், ஸின்க் மற்றும் வைட்டமின் டி…..இவற்றின் பற்றாகுறையும், ஆட்டோஇம்யூன் சூழலும் சேர்ந்து விடில்கோவை வரவழைக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தோலில் உள்ள மெலனின் செல்களை தாக்கி அழிக்க தோல் நிறம் மாறுகிறது. புகைபிடித்தல் முதலான பழக்கங்களும் பி12 வைட்டமின் இழப்பை துரிதபடுத்துகின்றன. தோல் மறுபடி கருப்பாக பி12 உதவும். ஆனால் பி12இன் இந்த பணியை நிகோடின் தடுத்துவிடுகிறது.

ஆக லுகொடெர்மா உள்ளவர்கள் தானியம் தவிர்த்த, நட்ஸ் தவிர்த்த, விதைகள் தவிர்த்த பேலியோ உணவு எடுப்பதன் மூலம் லுகொடெர்மாவை குணபடுத்த துவக்கலாம். சொரொயாசிஸுக்கு பலனளிக்கும் ஆட்டோஇம்யூன் டயட்டே இதற்கும் சிறந்த பலனளிக்கும். டயட் வேண்டுமெனில் மெஸேஜ் பாக்ஸில் அல்லது குழுவில் கேளுங்கள். அத்துடன் முக்கியமாக பி12 நிரம்பிய இறைச்சி, முட்டை உணவுகளை அதிகம் எடுக்கவேண்டும். அதை விட முக்கியமாக பாதிக்கபட்ட தோல்பகுதிகளை வைட்டமின் டி கிடைக்கும் மதிய வெயிலில் காட்டிவர தோலில் வெளுத்த பகுதிகள் கருப்பாக துவங்கும். விரைவில் லுகொடெர்மாவிலிருந்து விடுதலையும் கிடைக்கும்

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *