பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

pannaiyar_blessings_16

பெரியோர்கள் நம்மை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க! என்று வாழ்த்துவர்.

மகாலக்ஷ்மி தேவி நமக்கு பதினாறு ரூபங்களில் காட்சி தருபவள். அந்த 16 என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நமது வாழ்வியல் தர்மமான வேதமே இதை எடுத்துரைக்கிறது.

1. புகழோடு வாழ வேண்டும்.
2. கண் போன்ற கல்வியை கற்று வாழ்தல் வேண்டும்.
3. வலிவுடனும், பொலிவுடனும் வாழ வேண்டும்.
4. வெற்றி, வீரத்துடன் வாழ்தல் வேண்டும்.
5. நன்மைகளை பெற்று வாழ வேண்டும்.
6. பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும்.
7. உழவு செய்து நெற்களஞ்சியத்துடன் வாழ வேண்டும்.
8. நல்ல ஊழ் நமக்குத் துணை நிற்க வேண்டும்.
9. பாடுபட்டு தேடிய பலனை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்.
10. பிறர் துன்பம் போக்கிட பறந்த மனம் வேண்டும்.
11. பிறர் நம்மைக்கண்டு பழிக்காமல் வாழ்தல் வேண்டும்.
12. படாடோபமின்றி பண்புடன் வாழ வேண்டும்.
13. இளமையோடு இல்லறத்தில் வாழ வேண்டும்.
14. அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும்.
15. நோயின்றி சுகமுடன் வாழ வேண்டும்.
16. நீண்ட நாட்கள் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும்.

பவித்திரம் புனிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *