நிஜ மனிதர்கள்

amma_pannaiyar

சத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள  குன்றி மலைக்கிராமத்தில்  மாதேவியம்மா
வீட்டு திண்ணையில் பார்த்தோம்  ஏதோ போல என நினைத்து கேட்டோம்.

இவர்களது நெலத்துல  வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம்
இப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் .வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம்

மாதேவியிடம்”ஒரு கிலோ அவரை என்ன விலை?” என்றேன்

விலை தெரியாது ஏன்னா விற்பதில்லை “இது எங்களது
உணவு தேவைக்கு மட்டுமே” என்றார்.

“உங்களுக்கு வேண்ணா எடுத்துக்கொள்ளுங்க” என்றார்

“சரி ஒரு படி தாருங்கள்” என்றேன்.

“அளப்பது கிடையாது. ஏன்னா காசு வாங்குவதில்லை. எங்க காட்டுல பூமாதா கொடுத்ததுக்கு காசு வாங்கலாமா அய்யா…” என்றார்.

1 Comment

  1. மெய்யாகவே நிஜ மனிதர்கள் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *