ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா ? பால் விற்பது பெரிதா?

ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா ?  பால் விற்பது பெரிதா?


ராமசாமி தனது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வருடத்திற்கு 4 லட்சம் ( 4 lakhs CTC ) சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
அவனது உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்த பிறகு அவனது முகம் பெட்டர்மாக்ஸ் லைட்டை போல ஆனது.
இனிமேல் வாழ்வில் நமக்கு வசந்த காலம் என நினைத்தான்.

அதே நேரத்தில் அவனது நண்பன் மாடசாமி சாதாரன டிகிரி படிப்பில் பெயில் ஆனான்.   உறவினர் அனைவரும் அவனை கரிச்சு கொட்டினார்கள், ஒரு டிகிரி பாஸ் பன்ன துப்பு இல்லை.


நீயெல்லாம் பேசாம ஒரு இட்லி,தோசை கடையோ , பெட்டி கடையோ வச்சி பொழச்சுக்கோ.இல்லைனா ஒரு எருமை மாட்டை வாங்கி மேய்க்கத்தான் லாயக்கு என வசை பாடினார்கள்.


அவர்கள் சொன்னது போல மாடசாமி ஒரு 2 லட்சம் கடன் வாங்கி எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரத்தை தொடங்கினான்.

இவ்விருவரின் வாழ்க்கை பயணத்தை சற்று பார்ப்போம்.

ராமசாமி தனது credit card மூலம் ஒரு நல்ல பைக் வாங்கி அதில் அலுவலகம் போனான்.
மாடசாமி தனது TVS 50 இல் பால் விற்க புறப்பட்டான்.
இருவரும் சந்திக்கும் போது ராமசாமி பெருமையோடு ஹாய் என்பான்.
மாடசாமியோ ஒரு வித தோல்வி முகத்தோடு ஹாய் என்பான்…

6 மாதங்கள் ஓடியது…
ராமசாமி பைக் வாங்கிய கடனில் 20% மட்டும் கட்டி இருந்தான், அசல் 80 ஆயிரம் அப்படியே இருந்தது.
மாடசாமியோ தனது கடனில் 1 லட்சம் ரூபாயை கட்டி முடித்து இருந்தான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியோ தன் 80 ஆயிரம் கடன் கவலையில் லேசாக புன்னகைத்தான்.
மாடசாமியும் தனது 1 லட்சம் கடனை நினைத்து லேசாக புன்னகைத்தான்.

ஒரு வருடம் கழிந்தது …
ராமசாமி தனது சம்பல உயர்வை நம்பி இருந்தான், ஆனால் நிறுவனமோ recession period என காரணம் சொல்லி சம்பல உயர்வு தர மறுத்தது.
அந்த நேரத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ10 இல் இருந்து ரூ14 ஆக உயர்ந்து இருந்தது.
மாடசாமியின் வருமானம் 30% உயர்ந்தது, தனது 1 லட்சம் கடனையும் அடைத்துவிட்டான்.
ராமசாமியோ தனது bike loan ஐ முடித்துவிட்டு 16% வட்டியில் 2 லட்சம் ரூபாய் personal loan பெற்று வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வாங்கினான்.
அனைவரும் வியந்தனர் 2 வருடம் IT இல் வேலை செய்து இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியுமா என்று ?
மாடசாமியோ தனது வருமானத்தில் மேலும் 12 எருமை மாடுகள் வாங்கி தனது வருமானத்தை இரட்டிப்பாக்கினான்.

மீண்டும் இருவரும் சந்தித்த போது ராமசாமி தன் 2 லட்சம் கடன் பற்றிய கவலையில் ஒரு பாவமான புன்னகை செய்தான்.
மாடசாமியோ கடன் கவலையின்றி சந்தோஷமாக புன்னகைத்தான்.
2 வருடம் கழித்து ராமசாமி 10% சம்பள உயர்வு பெற்றான், உடனே car loan போட்டு ஒரு Maruthi wagon car வாங்கினான்.
இந்த நேரத்தில் மாடசாமியோ 2 ஏக்கர் நிலமும், 3 டஜன் எருமை மாடுகளும் வாங்கினான், பால் விலையோ அப்போது 30% உயர்ந்தது, இப்போது மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 200% அதிகம், பால் வியாபாரத்தை பெருக்க ஒரு mini load auto வாங்கினான்,
மீண்டும் அவர்கள் சந்தித்த போது காரில் பயணித்தாலும் கடன் கவலையால் ராமசாமியால் சிரிக்க முடியவில்லை, ஆனால் மாடசாமியோ தனது சொந்த ஆட்டோவில் கம்பீரமாக சிரித்தான்.

2 வருடங்கள் கழிந்தது …
ராமசாமி Home loan மூலம் 40 லட்சம் கடன் பெற்று ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினான், மாடசாமியின் எருமை மாடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது, 2 அபார்ட்மெண்ட் வாங்கினான்,
ராமசாமி மீண்டும் 10% சம்பள உயர்வு பெற்றான், இப்போது பால் விலை லிட்டர் 40 ரூபாய்,
மாடசாமியின் வருமானத்தை விட ராமசாமியின் வருமானம் 500% அதிகம் அதனால் அவன் ஒரு scoda car,innova car வாங்கினான்.

மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியின் மனநிலை தனது 40 லட்சம் கடனை நினைத்து குழம்பி இருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை,
மாடசாமியோ பெருமையுடன் சிரித்தான், அவன் இப்போது ஒரு சிறிய பால் பண்ணையின் முதலாளி அவனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள்.

அந்த இரவு ராமசாமி தீவிர மன உலைச்சலுக்கு ஆளானான், 5 வருடத்தில் மாடசாமி சம்பாதித்தது 4 கோடி சொத்து, 5லட்சம் மாத வருமானம், 25 பேருக்கு வேலை தந்துள்ளான் .
ஆனால் தானோ வருடத்திற்கு 7 லட்சம் சம்பளம் 40 லட்சம் கடன்,
விருப்பமற்ற வேலை…!!

குறிப்பு : 2008 இல் பால் விலை லிட்டர் ரூபாய் 10, இப்போது ரூபாய் 40,
தங்கம் கிராம் 12,500 ரூபாய், இப்போ கிட்டதட்ட 30,000 ரூபாய்,
5 வருடத்தில் IT துறையில் வேலை செய்பவரின் சம்பளம் 30% உயர்ந்துள்ளது, ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 300% உயர்ந்துள்ளது.
இந்த லட்சனத்தில் இன்னும் இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.

இங்கு இருக்கும் அனைவருமே ராமசாமிகள் தான்.

One Response

  1. மாரி செல்வம் 27/08/2014

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline