என்னை பற்றி

வணக்கம் ,

விவசாய குடும்பத்தில் பிறந்து இப்பொழுதும்/எப்பொழுதும்  விவசாயத்தில் தீராத காதல் காரணமாக இந்த பக்கம் .

விவசாயம் பற்றிய தேடலில் நிறைய தெரிந்து கொண்டேன் .நான் தெரிந்து கொண்டவைகளையும் , புதியதாய் படிப்பதையும், தெரிந்து கொள்வதையும் , பலரது பயனுள்ள பதிவுகளையும்  இங்கே நான் ஒரு நூலகம் போல தொகுத்து வைத்துள்ளேன்.

எங்கு சென்றாலும் மனது விவசாயத்தை தேடும் .பார்க்கும் இடம் எல்லாம் , கண்ணில் படுவதை எல்லாம் விவசாயத்துடன் இணைத்து பார்க்கும் மனம்.

நிறைய கனவுகள் ,நிறைய நிறைய வழிமுறைகள் இப்படி செய்தால் என்ன, அப்படி செய்தால் என்ன என்று சிந்தை நிறைந்து இருக்கும் . சில வேலைகளில் மிகவும் கஷ்டப்பட்டு களத்தில் வேலைகள் செய்தே கற்று கொள்ள முடிந்தது .அங்கும் பல துரோகங்கள் , ஏமாற்றங்கள் என நிறைய சந்திதே வெளி வர முடிந்தது .

புத்தக அறிவும் தேவை .அனுபவ அறிவும் அதிகம் தேவை .இங்கு நான் அனுபவ அறிவு என்று சொல்லுவது களப்பணி.அனுபவ அறிவை புத்தக அறிவுடன் சேர்த்து எது சரி எது தவறு என்று செயல் முறையில் பார்த்து முடிவுகள் செய்து கொள்வதுண்டு. எல்லாம் எல்லா இடத்திற்கும் ஒத்து போவது இல்லை , இடத்திற்கும் தேவைக்கும் தகுந்தற்போல மாறுபடுகிறது .மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் .அதனை ஏற்றுக்கொள்ள  வேண்டும் .

சில காலமாக முதல் உலகபோருக்கு  முன்பு எப்படி விவசாய முறைகள்  இருந்தது என்ற தேடலில் உள்ளேன் .தகவல்கள் உங்களிடமோ அல்லது கிடைத்தை பகிரவும் .அப்பொழுது விவசாயம் என்ற பொதுவான பெயரே இருந்தது. இன்றுபோல்  விவசாயத்தில்  மிக அதிகமான வகைகள், வேறு வகைகளோ  இல்லை .

நன்றி
பண்ணையார்
தொடர்பு கொள்ள : pannaiyar@hotmail.com

22 Comments

 1. வணக்கம் ஐயா,

  தங்கள் பண்ணையார் பதிவு நல்ல பயனுள்ள பதிவு, நான் engineer படித்து விட்டு விவசாயம் பார்த்தேன் நஷ்டம் வந்தது பிறகு வேலைக்கு சென்றுவிட்டேன்.
  வேலையே விட்டுவிட்டு இப்பொழுது மீண்டும் விவசாயத்தை கையில் எடுத்து உள்ளேன். சந்தோசமாக, என் பங்கு8 1/2 ஏக்கர் வறண்ட காடு கிணறு கிடையாது 2 போர் போட்டேன் பிறகு பக்கத்து தோட்டம் 5 ஏக்கர் குத்தகைக்கு எடுத்தேன், 80L*40B*12H pond ஒன்று எடுத்தேன், சொட்டுநீர் போட இருக்கேன், முதல் வெள்ளாமையாக பூசணி போட இருக்கேன், தங்களுக்கு தெரிந்த விபரங்கள் விற்பனை வரை தந்து உதவுமாறு கேட்டுகிறேன்.
  நன்றி
  இப்படிக்கு
  ஆதீஸ்வரன், 9443259456….

  1. வணக்கம் ,

   ஆர்வமுடன் செய்தால் எதுவும் சாத்தியமே .உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

   பொறுமையும் ,விடா முயற்சியும் மட்டுமே தேவை.

 2. நான் இளம்கலை வேளாண்மை பட்டபடிப்பு படித்து முடித்து இயற்கை வேளாண்மையில் கொண்ட ஈடுபாடு காரணமாக தற்போது வரை அதற்கான முனைப்புடன் செயல் பட்டுக்கொண்டு இருக்கிறேன். தங்களுடன் நட்பு தொடர விரும்புகிறேன்..

  1. வணக்கம் ,

   E-Mail வழியாக தொடர்பு கொள்ளவும் .
   நன்றி

 3. ஐயா!தங்களின் பண்ணையார்.காம் என்ற இணைய முகவரி ஒரு அற்புத பொக்கிஷம்.அதை நான் பார்க்காமல் தூங்குவதில்லை.எனக்கு ஐம்பது ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.ஆடு,மாடு,கோழி,மீன் போன்றவையும் உள்ளது.ஆனால் அதிலிருந்து இதுவரை லாபம் எடுக்க முடியவில்லை.அதற்குண்டான வழிகளை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

 4. Nice website and very useful information about agriculture & pets.
  I am also nature lover like you sir. And i like to construct a form house with garden in feature.

 5. ஐயா,

  தங்களின் கனவு இல்லம் பதிவு மிக அற்புதம். தங்களின் இந்த இனிமையான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். தாங்கள் இங்கு பதிவிட்டு இருப்பது போல இயற்கை சூழ்நிலை இணைந்த வீட்டை வடிவமைத்து வாழ வேண்டும் என்பதும், நமது தேவையை நாமே பூர்த்தி செய்வது போன்றதொரு வீட்டில் வாழ வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. தங்களின் பதிவைக் கண்டவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் தகவல்கள் எனக்கு மிகவும் உதவும். தங்களின் இந்த முயற்சி பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களின் முயற்சி முழுமையாக வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்…

 6. ஐயா
  எலும் ஒட்டி இலையும் ,அதன் புகைபடத்தையும் இணைத்தால் எங்கருக்கு பயன் உள்ளதாக அமையும்.
  நன்றி
  மோகன்.

 7. All your blogs are excellent and impressive. Your website ll b a encyclopedia for all. People can able to Get answers for their agriculture related questions as well as for other doubts fro your website itself. Keep going and continue your support for people like us. God bless you.
  Thank you

 8. பண்ணையாருக்கு என் நன்றிகள்
  விவசாயத்தையும் விவசாயிகளையும்
  கேவலமாக கருதும் மக்களுக்கிடையே
  தங்களது (என் கனவுகள்)பதிப்பு என்னை-
  -போன்ற விவசாயிகளுக்கு மிகவும்
  பயனுள்ளதாக இருக்கிறது.
  கனவுகள் நிஜமாகும் வாழ்த்துக்கள்

 9. இணையத்தில் வீறால் மீனை பற்றி தேடும் போது, உங்களது தளத்தின் அறிமுகம் கிடைத்தது. ஒன்றிரண்டு பதிவுகள் மட்டும் படித்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. ஓய்வு கிடைக்கும் போது மற்றவற்றை படிக்க வேண்டும்.. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

 10. ஐயா,
  நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன்.

  சில காலமாக, இந்தியாவுக்கு திரும்பி, விவசாயம் செய்ய விருப்பமாக உள்ளது. வருமானத்திற்காக அல்ல. இயற்கை விவசாயத்துக்கும், விவசாய தொழிலுக்கும் ஏதாதவது செய்வதற்கு. ஆனால் விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது.
  சுரேஷ் பாபு அவர்களை பற்றி படித்தேன். ஆர்வமாக இருந்தது.
  ஆலோசனைக்கு காத்திருக்கிறேன்.

  1. வணக்கம் ,

   நீங்கள் இருக்கும் நாடு மிக மிக வளமையான விவசாயம் செய்ய மிக உகந்த இடம் . அங்கே முயற்சி செய்யலாம் .

   விவசயம் எனபது ஒரு வாழ்வியல் படிப்பு அல்ல.

   அரவம் இருந்தால் மட்டுமே புதிய முயற்சிகள் தொடங்க இயலும் . வாழ்த்துக்கள் .

   தொடர்புக்கு
   pannaiyar@hotmail.com

   நன்றி

 11. Dear Sir,
  I like your blog. I have not yet gone through the entire listings. I will go through one by one. I am 61 years old and at this stage, I need only half acre to full-fill my dream. I am looking for a genuine person to guide me in this matter. Looking forward to know you more.

  With Kind Regards,
  S.R. Iyer
  Mumbai

 12. ஐயா வணக்கம் கொட்டை கரந்தை விதை கிடைக்குமா?

 13. மூலிகை விதைகள் , மூலிகைக் கன்றுகள், தங்களால் கொடுக்கமுடியுமா ? எனில் விலை விபரங்கள் தெரிவிக்கவும்.
  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *