எடையைக் குறைக்க விரும்பும் தாயா? இத படிங்க

கவனத்தில் வைக்க வேண்டியவை: * முதலில், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். குண்டாக இருப்பவர்கள் வெளியே போகக்கூடாது என்ற சட்டம் எங்கும் இல்லை. பெரிய மால், பூங்கா, கோவில், ஷாப்பிங், ஹோட்டல் என எங்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு பலரை சந்தித்து, அவர்களிடம் இந்த எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்களைக் கேட்டு நடந்து கொள்ளலாம்.

* எடைக்கு ஏற்ப புதிய ஆடைகள் வாங்கிக் கொள்ள வேண்டும். பழைய ஆடைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்து கண்ணாடியைப் பார்த்து அழுவதை விட, புதிய ஆடையில் அழகாய் தெரிவது நல்லதுதானே! அதுமட்டுமா, புது உடை வாங்க நமக்கு கசக்குமா என்ன?

* உறவுகளையும், சொந்த பந்தங்களையும் அணுக வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசுவதால், மனதில தைரியம் எழும். மேலும் தனியாக இருப்பதைவிட அவர்களுடன் பேசுகையில், மனதிற்கு ஆறுதல் கிடைப்பதோடு, நன்றாகவும் இருக்கும்.

* பிடித்த ஹோட்டல், பிடித்த உணவு, பிடித்த திரைப்படம், பிடித்த பாடல் என பிடித்த விஷயங்களை எப்போது கடைசியாகச் செய்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? இல்லையா? அதை இப்போது செய்யுங்கள். அது பெரியதாக இருக்க வேண்டியது இல்லை. அருகில் உள்ள கடைக்குச் சென்று, பிடித்த சாக்லேட் வாங்கி சாப்பிடுவது, பிடித்தப் பாடலைக் கேட்பது, பிடித்ததைச் செய்வது என்று இருப்பது மிகவும் சிறந்தது.

* கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தாரே, கணவர், அவரை முதலில் பிடித்து இஷ்டப் பட்டதைப் பேசித் தீர்க்க வேண்டும். இதனால் அவருடைய வார்த்தைகள் கண்டிப்பாக மனதை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாமல், இது இருவருக்கிடையே உள்ள காதலைப் பலப்படுத்தும்.

* அனைத்தையும் விட முக்கியமானது உடற்பயிற்சி. ஜிம் போகாவிட்டாலும், சிறியதாய் ஒரு டான்ஸ் அல்லது ஒரு நடை, ஒரு வேலை என ஏதாவது செய்து, உடலைச் சுறுசுறுப்பாக வைத்தால், எடை சீக்கிரமாகக் குறையும். குழந்தைப் பிறந்து ஆறு வாரம் அமைதியாக இருக்கவும். அதன் பின்னர் மெதுவாக வீட்டிலேயே சின்னச் சின்னப் பயிற்சி செய்யவும். இந்தப் பயிற்சிகள் சுறுசுறுப்பாக வைப்பதோடு, மனதையும் சாந்தப்படுத்தும்.

* கணிப்பொறி காலத்தில் கணினியில் கிடைக்காத தகவல் ஒன்று உண்டா? கணினியில் பிற தாய்மார்களின் நல்ல கதைகளைப் படிக்கவும். டிப்ஸ் எடுத்துக் கொள்ளவும். வீட்டிலேயே இருந்து உடல் எடையைப் பற்றி வருந்தி, மனதை வருத்தி, சோகமாக காலத்தை வீண் அடிப்பதைவிட, வெளியே சென்று பிடித்ததைச் செய்து கொஞ்சம் பயிற்சியும் செய்து சந்தோஷமாக வாழுங்களேன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline