இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் – மீன் அமினோ கரைசல் ,மோர் கரைசல்

மீன் அமினோ கரைசல் :

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் .21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

மோர் கரைசல் :

தேவையான பொருட்கள்:
புளித்த மோர் – 5 லி
இளநீர் – 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

அரப்பு மோர் கரைசல் :

இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும்

  1. பஞ்ச காவ்யா + ஜீவாமிர்தக்கரைசலை சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *